NEWS
கொரானாவால் கிராமசபை கூட்டத்துக்கு தடை – தமிழக அரசு
கொரானா பரவலால் இந்தாண்டு கிராமசபை கூட்டம் நடத்த முடியாது - தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
இந்தாண்டு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது....
திட்டமிட்டபடி நவம்பரில் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்குமாம்!
திட்டமிட்டபடி நவம்பரில் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்குமாம்!
இந்தியாவின் 51வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் வருகிற நவம்பர் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் திரையிடப்படும்.
இந்த திருவிழாவில், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கப்படும். சிறந்த திரைப்படம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படும்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் உள்ளது. இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. இதனால், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் கூட நடத்த முடியாமல் போனது. பின்னர் ரசிகர்கள் இன்றியும், குறைந்த அளவிலான ரசிகர்களுடனும் க...
கொரானா பரவல்… விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதியில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடு நடவடிக்கைகள் மாநிலமெங்கும் அமலில் உள்ளதால், விநாயகர் சிலைகளை சாலைகளில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழ்நாடு முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் புரிகிறது நிலையில் அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசின் உத்தரவை எதிர்த்து இந்து அமைப்புகள் நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
சுஷாந்த்சிங் தற்கொலை பேசுகிற யாரும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எந்த குரலும் கொடுக்கவில்லையே – சரத்பவார் கேள்வி
சுஷாந்த்சிங் தற்கொலை பேசுகிற யாரும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எந்த குரலும் கொடுக்கவில்லையே - சரத்பவார் கேள்வி
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யவில்லை. தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று அவரது குடும்பம் குற்றம் சாட்டியது. மும்பை காவல்துறை இந்த வழக்கில் சரியாக செயல்படவில்லை. வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் கூறியது. சுஷாந்தின் தந்தை புகார் அடிப்படையில் பீகார் மாநில அரசு வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு விவகாரத்தில் மகாராஷ்டிர அரசுக்கும், பீகார் அரசுக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. மேலும், சிபிஐ விசாரணை தேவை என கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதன்முறையாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அரசியல் குறித்த கருத்தை வெளியிட்டுள்...
பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் – விபி துரைசாமி சர்ச்சை பேட்டி
சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும்.
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையில்தான் கூட்டணிக் கட்சிகள் தேர்தலை சந்திக்கும். தமிழகத்தில் திமுக vs அதிமுக என இருந்த நிலை திமுக vs பாஜக என மாறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக தலைமையில் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்ட நிலையில் வி.பி.துரைசாமி கருத்து சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது....
எனக்கு இந்தி தெரியாது…நான் இந்தி பேசியதை நிரூபிக்க முடியுமா? – கனிமொழி கேள்வி
எனக்கு இந்தி தெரியாது...நான் இந்தி பேசியதை நிரூபிக்க முடியுமா? - எதிர்க்கேள்வி கேட்ட கனிமொழி
கனிமொழி-யின் இன்றைய பேட்டி :, "சென்னை விமான நிலையத்தில் தமிழ்மொழி அதிகம் தெரிந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எவ்வளவு பெரிய அவமானம். ப.சிதமபரம், குமாரசாமி உள்ளிட்டோர் தங்களுக்கே இதுபோன்று நடந்துள்ளது என பகிர்ந்துள்ளனர். டெல்லிக்கு சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் இந்தி கற்றுக்கொள்ளவில்லை.
தேவிலால் சென்னை வந்தபோது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க வில்லை. எந்த பொதுமேடையிலும் நான் இந்தி மொழிப்பெயர்த்ததில்லை. அப்படி மொழி பெயர்த்திருந்தால் நிரூபியுங்கள். நான் படித்த பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மட்டும்தான் இருந்தது.
அதைத்தான் நான் கற்றுக்கொண்டேன். இந்தி தெரிந்தால்தான் மொழி பெயர்க்...
எஸ்.வி.சேகர் ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார் – அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்
ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை... அதை அரசு நிறைவேற்றும்" என நக்கல் அடித்த அமைச்சர்.
தேசிய கொடியை அவமதிப்பு செய்தார், முதல்வரை தவறாக விமர்சித்தார் என நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் வந்துள்ளதே... அதன் பேரில் எஸ்.வி.சேகர் கைதாவாரா? என அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்த போது " தேசிய கொடியை அவமதிப்பு செய்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வரை அவதூறாக பேசினால் ஈசியாக மக்களிடம் தன்னை விளம்பர படுத்திக் கொள்ள முடியும் என்பதால் அவர் அப்படி நடந்து கொள்கிறார்.
அவருக்கு ரொம்ப நாள் ஆசை ஜெயிலுக்கு போக வேண்டும் என்று. அந்த ஆசையை அரசு நிறைவேற்றும்" என நக்கல் அடித்தார் அமைச்சர் ஜெயக்குமார்....
தேசிய கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது திடீர் புகார்?
தேசிய கொடியை எஸ்விசேகர் அவமதித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக அரசுக்கும் காமெடி நடிகர் எஸ்.வி.சேகருக்கும் ஏற்கனவே விமர்சன மோதல் இருந்து வரும் நிலையில் எஸ்.வி.சேகர் இந்திய தேசிய கொடியை அவமதித்தார் என புகார் வந்தால் அரசு சும்மா இருக்குமா?
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்கிறார்.
இவர் தேசிய கொடியை நடிகர் எஸ்.வி.சேகர் அவமதிப்பு செய்ததாக ஒரு புகார் கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.
அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர் தான் நடத்தும் யூடியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசிய கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்...


