முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தென்மாவட்ட பயண விவரம்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தென்மாவட்ட பயண விவரம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவி வருகிறது. அதன் தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வருகிறார். இன்று (5-ந் தேதி) பிற்பகல் 2 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சேலம் செல்கிறார். இரவில் சேலத்தில் தங்குகிறார்.
6-ந் தேதியன்று (நாளை) காலையில் சேலத்தில் இருந்து புறப்பட்டு கார் மூலம் திண்டுக்கல் செல்கிறார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
திண்டுக்கல் கலெக்டர் மற்றும் பல அதிகாரிகளுடன் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சிறு, குறு, நடுத்...








