ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மிரட்டலாக மிடுக்குடன் இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் ரபேல் போர் விமானங்கள்!

மிரட்டலாக மிடுக்குடன் இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் ரபேல் போர் விமானங்கள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு புறப்பட்டன. பயணத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபேல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி புறப்பட்டன. ரபேல் போர் விமானங்களின் பயணத்தின்போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானங்களும் இந்த பயணத்தில் உடன் வந்தன. பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்...
உலக அளவில் ஒரு நாளில் வைரஸ் பாதிப்பில் அதிக மரணங்களை சந்தித்த மோசமான நாடுகளில் முதலிடத்தில் இந்தியா!

உலக அளவில் ஒரு நாளில் வைரஸ் பாதிப்பில் அதிக மரணங்களை சந்தித்த மோசமான நாடுகளில் முதலிடத்தில் இந்தியா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    உலகிலேயே நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளில் மோசமான முதல் இடத்தை இந்தியா அடைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 11,000 பேர் வைரஸ் தொற்றால் புதிதாக தாக்கப்பட்டனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்கள் விகிதாச்சாரப்படி 636 பேர் பேருடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது, 627 பேருடன் பிரேசில் இரண்டாமிடத்தையும், 570 பேருடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன. நேற்று ஒரே நாளில் மூவாயிரத்து தொள்ளாயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஒரு கோடியே 2 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து சென்றிருந்தாலும். இன்னும் 50 லட்சம் பேர் மருத்துவம...
வைரஸ் பாதிப்பில் மீண்ட ஐஸ்வர்யாராய் மகளுடன் வீடு திரும்பினார்!

வைரஸ் பாதிப்பில் மீண்ட ஐஸ்வர்யாராய் மகளுடன் வீடு திரும்பினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    வைரஸ் பாதிப்பில் மீண்ட ஐஸ்வர்யாராய் மகளுடன் வீடு திரும்பினார்! பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 11 ஆம் தேதி கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பையில் உள்ள நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரானா இல்லை என்பது தெரியவந்தது ஆனால் அபிஷேக் பச்சனின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான  ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது ஆரத்யாவுக்கும் கொரானா இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் கடந்த 18 ஆம் தேதி அதிகாலை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கு திடீரென மூ...
அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’

அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் 'டைம் கேப்சூல்' அயோத்தி, ராமர் கோயில் மற்றும் ராம ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில்... அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைஅறிவித்துள்ளது டைம் கேப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராமர் ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்கு முடியும் என்று கருதப்படுகிறது முக்கியமான தகவல்களை எதிர்காலத் சந்ததியினரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து பாதுகாப்பதே "டைம் கேப்சூல்" தற்கால நிகழ்வுகள், தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களும்... அயோத்தி வழக்கில் ...
ஆன்லைன் மூலம் ஆவணங்கள் தமிழக பதிவுத்துறை அடுத்த அதிரடி!

ஆன்லைன் மூலம் ஆவணங்கள் தமிழக பதிவுத்துறை அடுத்த அதிரடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கி வைத்தார். அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறித்த நேரத்தில் வரிசைக்கிரமமாகவும் விரைவாகவும் பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம். அதற்கு ஏற்றபடி மென்பொருளில், ‘பொதுமக்களே ஆன்லைன் வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை’ என்ற வசதி உருவாக்கப்பட்டுள்ளது. “https://tnreginet.gov.in” என்ற இணையதளத்தில் முதலில் பொதுமக்கள் என்ற வகைப்பாட்டில் புதிய உள்நுழைவை (லாக் இன்) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதற்குரிய பயனர் பெயர், கடவுச்சொல்லை (யூசர் நேம், பாஸ்வர்டு) உள்ளடு செய்து உள்நுழைவிற்குள் சென்று, பதிவு செய்தல், ஆவணப் பதிவு ஆவணத்தை உரு...
மாடுகள் இல்லாததால் மகள்களை ஏர் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த பாலிவுட் நடிகர்!

மாடுகள் இல்லாததால் மகள்களை ஏர் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த பாலிவுட் நடிகர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இருப்பினும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதில் ஏரில் தன் இரு மகள்களை நிலத்தில் பூட்டி உழவு செய்தார். ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகேஸ்வர ராவ் நடத்தி வந்த டீக்கடை வியாபாரம்கொரோனா தொற்று பரவலால் நசிந்து போனது. அதனால் அவர் தன் கிராமத்தில் உள்ள...
ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் திட்டத்தை தொடங்கிய முதல்வர்!

ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் திட்டத்தை தொடங்கிய முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க ரேசன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். தமிழக அரசு, கொரானா தொற்று பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ரேஷன் கடைகள் வாயிலாக, அனைத்து கார்டுதாரர்களுக்கும், தலா, ஒரு உறுப்பினருக்கு, இரண்டு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தை, முதல்வர் இன்று துவக்கி வைத்தார். இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கார்டுதாரர்களுக்கு வழங்க உள்ள முக கவசம் கொள்முதல் பணிகளை, வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை மேற்கொள்கிறது. அவற்றை வழங்கும் பணி மட்டுமே, ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், முக கவசம் வினியோகம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள் த...
சாத்தான்குளம் போலீஸ் சித்தரவதையில் கொல்லப்பட்ட ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது!

சாத்தான்குளம் போலீஸ் சித்தரவதையில் கொல்லப்பட்ட ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: ஆணை வழங்கப்பட்டது சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, ஜெயராஜ் மகளுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு நிதி உதவி அளித்திருந்ததோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படுமென ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சோதனையில் இருந்து மீள்...
பாலிவுட்டில் என் வேலையை கெடுக்கும் கும்பல் – ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை குற்றச்சாட்டு

பாலிவுட்டில் என் வேலையை கெடுக்கும் கும்பல் – ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:- பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன். ‘தில் பெச்சாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள். அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்த...