ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

14ம் தேதிமுதல் 19ம் தேதி வரை சபரிமலை நடை திறப்பு பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு!

14ம் தேதிமுதல் 19ம் தேதி வரை சபரிமலை நடை திறப்பு பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கேரள முதல்வர் பினராயி விஜயன் வரும் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என அறிவித்தார். அதன்படி பக்தர்கள் தரிசனத்துக்காக மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை வருகிற 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஐயப்பன் கோவிலுக்கான புதிய நடைமுறைகள் குறித்து தேவசம் போர்டு அறிவித்துள்ளது. தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
அதிகப்படியான கட்டண சர்ச்சை எழுந்த நிலையில் மின்வாரிய தலைவர் அதிரடி மாற்றம்!

அதிகப்படியான கட்டண சர்ச்சை எழுந்த நிலையில் மின்வாரிய தலைவர் அதிரடி மாற்றம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மின்வாரியத்தில் அதிகப்படியான கட்டணம் குறித்த சர்ச்சைகள் பரவலாக எழுந்த நிலையில் மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர் திடீரென வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுதும் தங்களுக்கு மின் வாரியக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக பலரும் புகார எழுப்பினர். ஊரடங்கால் திறக்கப்படாத கடைகளுக்கு முந்தைய கட்டணமே கட்டச் சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாக மின்சார வாரியம் மீது அதிருப்தியான சூழல் உருவானது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த விக்ரம் கபூர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவுக்குத் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின்பகிர்மான கழக நிர்வாக இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடி...
இந்தியாவில் கொரானா வைரஸ் செப்டம்பரில் மறையுமாம் ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

இந்தியாவில் கொரானா வைரஸ் செப்டம்பரில் மறையுமாம் ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தியாவில் கொரானா வைரஸ் செப்டம்பரில் மறையுமாம் ஆராய்ச்சியாளர்கள் கருத்து! இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரானா தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என சுகாதார அமைச்சகத்தின் இரு பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கணிதமுறை மாதிரி ஆய்வின் படி அவர்கள் இதைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தொற்றால் இறந்தவர்கள் மற்றும் குணமடைந்த எண்ணிக்கையுடன் சரிசமமாகும்போது, அதன் குணம் 100 சதவிகித வரம்பை எட்டி, தொற்றுப்பரவல் மறையும் என்று இந்த ஆய்வு தெரிவிப்பதாகக் கூறுகின்றனர். இந்த ஆய்வு, எபிடெமியாலஜி இண்டெர்நேஷனல் என்னும் ஆய்விதழில் மருத்துவர் அனில் குமார் மற்றும் ரூபாலி ராய் ஆகிய இரு பொது சுகாதார மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பெய்லி கணிதமாதிரி முறையில் செய்யப்பட்ட...
மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்த கப்பல்!

மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்த கப்பல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்த கப்பல் 700 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்திய கடற்படை கப்பல் ஐ .என் எஸ்.ஜலஸ்வா மாலத்தீவுலிருந்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் நிலகரி ஒன்றாவது தளத்திற்க்கு வந்தடைந்தது.
மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லாவிட்டால் கொரானா பரவலை தடுப்பது சிரமம் என்கிறார் முதல்வஎ எடப்பாடிபழனிச்சாமி.

மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லாவிட்டால் கொரானா பரவலை தடுப்பது சிரமம் என்கிறார் முதல்வஎ எடப்பாடிபழனிச்சாமி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      உ மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லாவிட்டால் கொரானா பரவலை தடுப்பது சிரமம் என்கிறார் முதல்வஎ எடப்பாடிபழனிச்சாமி. கொரானா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:- * வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் * தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் * மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரானா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது * மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் * கொரானா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில்தான் அதிகம் * கொரானாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே ...
சிம்புவுக்கு கல்யாணம் என்பதெல்லாம் சும்மா வதந்தி நம்பாதீங்க என்கிறார் உஷா ராஜேந்தர்

சிம்புவுக்கு கல்யாணம் என்பதெல்லாம் சும்மா வதந்தி நம்பாதீங்க என்கிறார் உஷா ராஜேந்தர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சிம்புவுக்கு கல்யாணம் என்பதெல்லாம் சும்மா வதந்தி நம்பாதீங்க என்கிறார் உஷா ராஜேந்தர். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:   அனைவருக்கும் வணக்கம். எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி. இப்படிக்கு, டி.ராஜேந்தர் M.A உஷா ராஜேந்தர்...
கொரானா சிக்கல் 2020ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் ரத்து

கொரானா சிக்கல் 2020ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் ரத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா சிக்கல் 2020ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் ரத்து இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று, வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதாகும். ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு அடுத்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அந்த புனிதப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 2 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு ஹஜ் புனிதப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்கான கட்டணத்தை அவர்கள் பலரும் ஹஜ் கமிட்டியிடம் செலுத்தி இருந்தனர். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று 2 லட்சத்து 37 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், சவுதி அரேபியாவில் 95 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கும் பரவி இருக்கிறது...
கொரானா நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தால்… தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெல்லி முதல்வர் எச்சரிக்கை!

கொரானா நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தால்… தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெல்லி முதல்வர் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தால்... தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை! டெல்லியில் சில தனியார் ஆஸ்பத்திரிகள் கொரானா நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்க லட்சக்கணக்கான ரூபாய் வசூலிப்பதாகவும், அந்த ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் 36 அரசு ஆய்வகங்களும், மற்றும் சில தனியார் ஆய்வகங்களும் கொரானா பரிசோதனை நடத்தி வருகின்றன. டெல்லியில் உள்ள பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை....
கொரானா முடிவு தெரியாமல் கோயில்கள் திறப்பு… பிரசாதம், தீர்த்தம், அன்னதானம் எதுவும் நேரடியாக கிடையாதாம்!

கொரானா முடிவு தெரியாமல் கோயில்கள் திறப்பு… பிரசாதம், தீர்த்தம், அன்னதானம் எதுவும் நேரடியாக கிடையாதாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா முடிவு தெரியாமல் கோயில்கள் திறப்பு... பிரசாதம், தீர்த்தம், அன்னதானம் எதுவும் நேரடியாக கிடையாதாம். கொரானா வைரஸ் பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உலக அளவில் பாதிப்பில் 11வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 6வது இடத்துக்கு உயர்ந்துள்ளது உண்மையில் அச்சப்பட வேண்டிய உயர்வு இது. கொரானா எப்போது முடிவுக்கு வரும் என்பதே தெரியாத போது மத வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்து உள்ளது. மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரானா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தற்போது 5-ஆம் கட்டமாக நடைமுறையில் உள்ள ஊர்டங்கில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட ...
கொரானா சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைத்த கட்டணம் பாதியான மர்மம்!

கொரானா சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைத்த கட்டணம் பாதியான மர்மம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் கொரானா பரவல் நாளுக்கு நாள் மிக அதிகமாக உயர்ந்து கொண்டே போகிறது. இந்த சூழலில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் அதற்கான கட்டணமாக 10 நாளைக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 280 ரூபாயும், 17 நாள் சிகிச்சைக்கு 4 லட்சத்து 31 ஆயிரத்து 280 ரூபாயும் நிர்ணயித்து அரசு அனுமதிக்கு பரிந்துரைக்கபட்டது. இந்தளவுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிப்பது சாதாரண மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. தனியார் கட்டண கொள்ளைக்கு அரசே துணை போகிறதா என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரானாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானாவுக்கு சிகிச்சையளிக்கும்...