ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அல்வா கிண்டி ஆரம்பித்த பட்ஜெட் மக்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது – கமல்ஹாசன் டிவீட்

அல்வா கிண்டி ஆரம்பித்த பட்ஜெட் மக்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது – கமல்ஹாசன் டிவீட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    மக்களுக்கு அல்வா கொடுத்த மத்திய பட்ஜெட் - கமல்ஹாசன் மத்தியில் ஆளும் பாஜக அரசின் 2020 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்தார். வழக்கமாக மத்திய அரசு எப்போதெல்லாம் பட்ஜெட் தாக்கல் செய்தாலும் அதற்கு முன் பட்ஜெட் தயாரித்த பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பான அல்வா கிண்டி தருவது வழக்கம். இந்த பட்ஜெட்டின் போதும் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு கொடுத்தார். மிக நீண்ட பட்ஜெட் உரை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த பட்ஜெட்டை "மிக நீண்ட பட்ஜெட் ஆனாலும் வெற்று பட்ஜெட்" என கிண்டல் அடித்தார். நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்த பட்ஜெட் பற்றி டிவிட்டரில் " அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை." என குறிப்...
மத்திய அரசு தாக்கல் செய்தது “வெற்று” பட்ஜெட் – ராகுல் நக்கல்

மத்திய அரசு தாக்கல் செய்தது “வெற்று” பட்ஜெட் – ராகுல் நக்கல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசு தாக்கல் செய்தது "வெற்று" பட்ஜெட் - ராகுல் நக்கல் பாராளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார். இந்நிலையில், இந்த நிதிநிலை அறிக்கை தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ‘வேலை வாய்ப்பின்மை என்பது நாடு எதிர்நோக்கியுள்ள அதிமுக்கிய பிரச்சனையாக உள்ளது. இதை தீர்ப்பதற்கும் நமது இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இந்த பட்ஜெட்டில் எவ்வித ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் நான் பார்க்கவில்லை. பட்ஜெட்டில் உள்ள அனைத்தும் அரசின் மனப்பாங்கை விவரிக்கின்றது. எல்லாமே வெறும் பேச்சுதான். ஆனால், எதுவுமே நடப்பதில்லை. நிதிநிலை அறிக்க...
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – நிர்மலா சீத்தாராமன்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – நிர்மலா சீத்தாராமன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழர்களின் தொன்மையை உலகுக்கு விளக்கும் வகையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியபோது கூறியது; சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு முக்கியமான நகரங்கல் தேஜஸ் ரயில் மூலம் இணைக்கப்படும். சுற்றுலா துறையை மேம்படுத்த ரூ. 2500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகம், அரியானா, உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 5 மாநிலங்களில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்....
பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தனிநபர் வருமானம் 5 லட்சம் ரூபாய் இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக வரி குறைப்பு. 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது. 10 லட்சம் முதல் 12,5 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால்  30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி குறைப்பு 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரி வருமானம் இருந்தால் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 30 சதவீதம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த வருமான வரி குறைப்பு நடவட...
நேர்மையாக தேர்தல் நடந்தால் ராதாரவி தோல்வி உறுதி என்பதால் சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டமா?

நேர்மையாக தேர்தல் நடந்தால் ராதாரவி தோல்வி உறுதி என்பதால் சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டமா?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டம்! தமிழ் சினிமாவில் இப்போது ஹாட் டாப்பிக் டப்பிங் யூனியன் தேர்தல்தான். நில மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுகிறார். சின்மயி அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர் டப்பிங் யூனியன் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு செய்துள்ளார். ஏற்கனவே ராதாரவி டப்பிங் யூனியனை தனது சொந்த அலுவலகம் போல பயன்படுத்தி பல வகையில் பண முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினாலும் அப்படி குற்றம் சுமத்தியவர்களையே சங்கத்தை விட்டு வெளியேற்றியிருக்கிறார் ராதாரவி. பொதுக்குழுவிலும் சங்கத்துக்கு தொடர்பில்லாத அடியாட்களை வைத்துக் கொண்டு யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாதபடி கூட்டத்தை நடத்தி முடித்தார் என்ற க...
50 லட்சம் மியூசிக் டிராக்குகளை அனுமதியுடன் வைத்திருக்கும் லேகா மியூசிக்!

50 லட்சம் மியூசிக் டிராக்குகளை அனுமதியுடன் வைத்திருக்கும் லேகா மியூசிக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
    உலக தரத்தில் முறையான உரிமை பெற்ற 50 இலட்சம்  மியூஸிக் ட்ராக்குகள் தயார் நிலையில்! லேகா மியூஸிக்... பிரபல விளம்பர பட இயக்குநரான லேகா ரத்னகுமார் தலைவராக இருக்கும் இந்த இசை நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைப் படவுலகில் புரிந்து கொண்டிருக்கிறது. இன்றைய கலைத்துறை வளர்ச்சியில், தொழில் நுணுக்க முன்னேற்றத்தில் இசை விஷயத்தில் நம் திரைப்படங்களும், வெப் தொடர்களும், குறும்படங்களும், வேறு பல கலைப் படைப்புகளும் உலகத் தரத்தில் இசையைக் கொண்டிருக்க வேண்டியது அவசிய தேவையாகவும், காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. இந்தச் சூழலில் அதற்கென்றே அவதாரம் எடுத்திருக்கிறது ‘லேகா மியூஸிக்’ நிறுவனம். இந்திய திரைப்படத் துறைக்கு இதன் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத, மதிப்பிற்குரிய செயலை இந்த இசைக் கருவூலத்தின் மூலம் செய்கிறார் லேகா ரத்னகுமார். அதற்காகவே படவுலகம் நன்றியுடன் அவருக்கு கடன்பட்டிருக்கிற...
இன்று முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

இன்று முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக்கூட்டம் நடக்கிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அவரது உரையில், அரசின் கொள்கைகள் மற்றும் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டுக்கான (2019-2020) பொருளாதார ஆய்வறிக்கையை, பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடியாக இந்த ஆய்வு அறிக்கை இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாகவும் வெற்றிகரமாகவும் செயல்பட அனைத்து எம்பிக்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்....
ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் தேர்தலில் சின்மயி போட்டி!

ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் தேர்தலில் சின்மயி போட்டி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ராதாரவியை எதிர்த்து டப்பிங் யூனியன் தேர்தலில் சின்மயி போட்டி! தமிழ் சினிமா உலகில் உள்ள அனைத்து சங்கங்களிலும் ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டேதான் வருகிறது. ராதாரவி தலைவராக உள்ள டப்பிங் யூனியன் சிக்கல் இருக்கிற எல்லா சங்கங்களையும் தூக்கி சாப்பிடும் அளவில் உள்ளது. தலைவராக இருக்கும் ராதாரவியை எதிர்த்து உறுப்பினர்கள் யார் பேசினாலும் உடனே அவர்களை சங்கத்தில் இருந்து நீக்குவது, அவர்களை படங்களில் பணியாற்ற விடாமல் தடுப்பது உட்பட பல பஞ்சாயத்துகள் கோர்ட்டில் வழக்காக தாக்கலும் ஆகியுள்ளது. அப்படி ஒரு சிக்கலில் மாட்டியவர் பாடகி சின்மயி. இவரை டப்பிங் யூனியனில் இருந்து திடீரென சந்தா கட்டி புதுப்பிக்க தவறிவிட்டார் என காரணம் சொல்லி சங்கத்தை விட்டு ராதாரவி தலைமையிலான நிர்வாகம் நீக்கியது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில் , சின்மயி நீக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் உத்தர...
ரஜினியின் சாகசங்கள் சிறப்பாக இருக்கும் – டிஸ்கவரி சேனல் மகிழ்ச்சி

ரஜினியின் சாகசங்கள் சிறப்பாக இருக்கும் – டிஸ்கவரி சேனல் மகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகர்கள்
      சூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைகாட்சி தயாரிப்பில் அகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடுத்துவார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகைகள் ஜூலியா ராபர்ட்ஸ், கேட் வின்ஸ்லெட் ,டென்னிஸ் வீரர் ராஜர் பெடரர் , மற்றும் சென்ற வருடம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர் . பிரதமர் மோடியுடன் நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியி...
காயமடைந்தாலும் டிஸ்கவரி சாகச நிகழ்ச்சியில் நடித்து கொடுத்த ரஜினி!

காயமடைந்தாலும் டிஸ்கவரி சாகச நிகழ்ச்சியில் நடித்து கொடுத்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்று தருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது உடனே ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்ட நிலையில் அவர் சென்னை திரும்பினர்....