கதை திருட்டு போய் வசன திருட்டு புகாரில் சிக்கிய இயக்குனர் லிங்குசாமி…
தமிழ் சினிமாவில் கதை திருட்டு புகார் ஒன்றும் புதுசு இல்லை... பிரபல நடிகர் அல்லது இயக்குனர் படங்கள் ரிலீஸ் நேரத்தில் இப்படி திருட்டு கதை புகார்கள் கிளம்பும்...
அதில் பல உண்மையாக இருந்தாலும் கரன்சி பலம்... காவாலிதனம் இப்படி ஏதாவது ஒன்றால் அந்த புகார் கிடப்பில் போடப்படும்.
இந்த புகாரும் ஒரு திருட்டு புகார்தான்... இந்த முறை கதைக்கு பதில் வசனத்தை திருடி இருக்கிறார்கள்.
எப்படி...
விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் 2ம் பாகம் இப்போது எடுத்து வருகிறார்கள்.
தயாரிப்பு ஹீரோ இரண்டும் விஷால்... இயக்கி தர வேண்டியது லிங்குசாமி.
மதுரை கதை என்பதால் மதுரை வட்டார மொழியில் வசனம் இருந்தால் நலம் என கருதிய இயக்குனர் தரப்பு அங்கே தேடி இங்கே தேடி கடைசியில் கண்டு பிடித்தது... பங்காளியை...
இவர் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர்... சினிமாவில் பி.ஆர்.ஓ., ஆர்ட்டிஸ்ட் ம...









