திரைப்படங்கள்
லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!
லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் "மாபியா" அருண் விஜய்..!
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'மாஃபியா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான டைட்டிலே இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
அருண்விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக இளம் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார்.
மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடித்து வருகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது...
ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் வெண்ணிலா கபடி குழு 2
ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் வெண்ணிலா கபடி குழு 2
2009-ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”.
இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.
மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில், இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். சந்தோஷ், பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'வெண்ணிலா கபடி குழு 2' ...
சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்…
சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம்.
அப்பா விஜய் கேரக்டர் பெயர் பிகில் என்பதும் இவர் உள்ளூர் தாதா என்றும், அதேபோல் மகன் விஜய் கேரக்டர் பெயர் மைக்கேல் என்பதும், அவர் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் விஜய் வாழும் பகுதியின் பெயர் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 'சமாதானபுரம்' என்பதுதான் விஜய்யின் சொந்த ஊர் என இந்த படத்தில் காட்டப்படுகிறது.
அதாவது அனைத்து இன மக்களும் சமாதானமாக வாழும் பகுதி என்பதால் அந்த பகுதிக்கு விஜய்யே சமாதானபுரம் என மாற்றியதாகவும் கதையில் உள்ளதாம்
விஜய்யின் மைக்கேல் கதாப்பாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஐ.டி.கார்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட குழுவின் தலைமை பயிற்சியாளர் மைக்கில்...
விமானத்தில் டேக் ஆப் ஆன சிம்புவின் மாநாடு..!
மாநாடு தொடங்க ரெடியாகிட்டேன்... வீடியோ வெளியிட்ட சிம்பு..!
நடிகர் சிம்பு "மஹா" படத்தில் நடித்து முடித்ததும் கவுதம் கார்த்தியுடன் இணைந்து ஞானவேல்ராஜா தயாரிக்கும் படப்பிடிப்பில் பிசியாக நடித்தார்.
இந்த படங்களில் நடிப்பதற்கு முன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க அறிவிப்பு வெளியிட்டிருந்தார் சிம்பு.
ஆனால் வெளிநாட்டு படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அனுமதி பெற வேண்டிய சூழல் இருந்ததால் பக்காவாக எல்லாவற்றையும் முடித்து இப்போது ஷூட்டிங் தொடங்க தயாராகியிருக்கிறார்கள்.
https://twitter.com/onlykodanki/status/1145679156249632769?s=19
ஷூட்டிங் தொடங்கப் போவதை சிம்பு தன் பாணியில் சின்னதாக வீடியோ வெளியிட்டு மாநாடு டேக் ஆப் ஆனதை சொல்லி இருக்கிறார்.
மலேசியாவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்திய பின் அடுத்த கட்ட படப்பிடிப்பை கோவையில் நடத...
போக்குவரத்து துறை அவலங்களை தோலுரிக்க வருகிறதாம் தோழர் வெங்கடேசன்..!
இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்பில், மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன்”
காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள்.
எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது தோழர் வெங்கடேசன். இத்திரைப்படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டி அதிர்வை ஏற்படுத்தும் எனபெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்பட குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நட...
“கிறிஸ்மஸ் கூப்பன்” படம் மூலம் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்..!
கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’
கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’.
தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை .முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ |நிறுவனமும், சர்வதேச தரத்தில் நல்ல கதைகளங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், ஆசியாவில் விநியோகித்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து, ஒரு யதார்த்தமான அழுத்தமான காதல் கதையை மிக நளினமானப் படைத்திருக்கின்றனர்.
முழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் ச...
நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..!
நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..!
நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தது, மீடியாக்கள் முக்கியத்துவம் அளித்தது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.
இந்நிலையில், இது தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் கூறியதாவது:- நான் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்திருக்கிறேன். அப்போது விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் பொதுச்செயலாளராகவும் இருந்தனர்.
அப்போது நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தோம். இருப்பினும் நடிகர் சங்கம் என வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
ஆனால் இப்போது நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள், அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல், அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது" என அவர் கூறினார்....
ரசிகனை வசப்படுத்தும் வித்தைக்காரன் ஜிவி – கோடங்கி விமர்சனம்
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி படம் வரும்.
இதுவரை சொல்லப்படாத கதை... என்று சொல்லிக் கொள்ள தகுதி உடைய படம்தான் ஜிவி.
8 தோட்டாக்கள் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த வெற்றி மீண்டும் ஜிவி படம் மூலமாக தான் ஒரு அழுத்தமான வெற்றி கதையின் நாயகன் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.
தமிழ் எழுத்தில் அறிமுக இயக்குனர் கோபிநாத் ஒவ்வொரு காட்சிகளையும் நேர்த்தியாக நகர்த்தி உள்ளார்.
கதைப்படி ரோஹிணி வீட்டில் வெற்றியும், கருணாகரனும் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். முடக்குவாத கணவன், கண் தெரியாத மகளுடன் இருக்கும் ரோஹிணி வீட்டில் இருந்த நகைகளை வெற்றி திருடிக் கொள்கிறார். அதற்கு கருணாகரன் உதவி செய்கிறார்.
பார்வையில்லாத மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த நகைகள் திருடு போனதால் கல்யாணம் நடந்ததா இல்லையா , நகை திருட்டு செய்த வெற்றி மாட்டிக் கொண்டாரா, இல்லையா என்பதை ஒரு கைதேர்ந்த சிற்பி ப...
பீர் குடித்ததால் பறி போன வாய்ப்பு – ராதிகா ஆப்தே பகீர்
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ராதிகா ஆப்தேவுக்கு ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்ததுதான் பெரிய பேரை வாங்கி தந்தது.
அரை நிர்வாணமாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இவர் இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்களை சொல்லும் போது , அதிக பீர் குடித்ததற்காக ஒரு படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன். அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன...

