மாரீசன் கோடங்கி விமர்சனம் 3/5
ஒரு திருடனும் ஞாபக மறதி பாதிப்பில் உள்ள ஒருவரும் பயணிக்க நேர்ந்தால் என்ன ஆகும்... குறிப்பாக ஞாபகமறதி நபரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை திருடன் தெரிந்து கொண்டு அதை பறிக்க திட்டமிட்டு நல்லவன் போல நடித்தால் என்ன நடக்குமோ அதைதான் திருடனாக பகத்பாசிலும், ஞாபகமறதி நபராக வடிவேலுவும் நடித்திருக்கிறார்கள்.
ஆனால், வடிவேலுவோ பகத் பாசிலுடன் பயணித்தாலும், அவருக்கே தெரியாமல் மிகப்பெரிய வேலை செய்கிறார்.
அதோடு, இவர்கள் பயணிக்கும் ஊர்களில் சிலர் கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொன்றது யார் என தெரியாமல் போலீஸ் திணறுகிறது.
கொலைகளுக்கும், பகத் பாசிலுக்கும் என்ன தொடர்பு? வடிவேலு உண்மையில் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சுவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்ல முயற்சிக்கிறார்கள...









