விஷால் நடிப்பில் “அயோக்யா” இன்று பூஜையுடன் ஆரம்பம்
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் B. மது தயாரிப்பில் , விஷால் நடிப்பில் “அயோக்யா” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது !
விஷால் நடிப்பில் உருவாகவிருக்கும் அயோக்யா திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் B. மது தயாரிக்கிறார்.
இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் G.K. ரெட்டி , கலைப்புலி S. தாணு , ரவி பிரசாத் , KS ரவிக்குமார் , காட்ராகட்ட பிரசாத் , கிருஷ்ணா ரெட்டி , இயக்குனர்கள் A.R. முருகதாஸ் , லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரா. பார்த்திபன் , KS ரவிக்குமார் , சச்சு , வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
படத்துக்கு இசை சாம் C.S , கேமரா R. கார்த்திக் , கலை S.S. மூர்த்தி , எடிட்டிங் ரூபன் , ஸ்டண்ட் ராம் , லக்ஷ்மன் , ந...









