‘கண்’ பூரா கண்ணீர்… கலை இல்லை… மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம்
‘கண்’ பூரா கண்ணீர்... கலை இல்லை... மானை காணோம் ‘கண்ணே கலைமானே’
கோடங்கி விமர்சனம்
யதார்த்த படங்களை சமரசம் செய்து கொள்ளாமல் திரைக்கு கொண்டு வரும் இயக்குனர் சீனு ராமசாமியின் படம்னு போய் ஏமாந்த ஏராளமான நல்ல சினிமா விரும்பிகள் படம் முடிஞ்சி கண்ணு கலங்கி வீங்கி வெறுத்து தெறிக்க வைச்சிருக்கிற படம்தான் கண்ணே கலைமானே...
இயற்கை விவசாயம் பத்தி பேசுறேன்னு இருக்குற விவசாயத்தையும் விவசாயிகளுக்கு மறக்கடிக்க இந்த படம் பாத்தா போதும்...
கதை ஒண்ணும் புதுசு இல்லை... ரசாயன உரங்களை எதிர்த்து இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் கிராமத்து படித்த இளைஞன் உதயநிதி... அந்த கிராமத்தை சேர்ந்த கிராம வங்கிக்கு அதிகாரியாக வருகிறார் தமன்னா.
ஆரம்பத்தில் மோதலில் தொடங்கும் தமன்னா உதயநிதி விவகாரம் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இந்த காதலுக்கு ஊரில் பெரிய புள்ளியாக இருக்கும் உதயநிதி குடும்பம் பெருசாக எதிர்ப்பு தெரிவிக்காமல் இர...









