தயாரிப்பாளர் கத்திரியால் “கட்” ஆன பாலா! ஷாக் ஆன திரையுலகம்
ஒரு கல்யாண மண்டபத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை கையில் இருந்த தாலியை பிடுங்கி விரட்டி விட்டு வேறு மாப்பிள்ளை விரைவில் காண்பிக்கிறோம் என்றால் அந்த மாப்பிள்ளைக்கு எப்படி இருக்குமோ அப்படி ஆகிப்போனது இயக்குனர் பாலா நிலை.
விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆக இருந்த படம் வர்மா.
தெலுங்கில் மெகா ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தைதான் இயக்குனர் பாலா ரீமேக் செய்யப்போகிறார் என அறிவித்தார்கள்.
பல மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது.
சில மாதங்களுக்கு முன் துருவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வர்மா டிரைலர் வெளியீடும் நடை பெற்றது.
படம் முழுதும் முடிந்து ரிலீசுக்கு ரெடி ஆனது.
படத்தை பார்த்த விக்ரம், மற்ற தயாரிப்பாளர் உட்பட விக்ரம் நண்பர்களும் பயங்கர ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
காரணம்… தெலுங்கில் வசூல் வேட்டையாடி மெகா ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்துக்கும் இப்போது பாலா காண்பித்த வர்மா படத்துக்கும் த...









