கிரிக்கெட் விளையாட்டை கட்டி வைத்துள்ள “நூல்” அறுத்த புளூ ஸ்டார் கோடங்கி விமர்சனம் 4/5
ரஞ்சித் தயாரிப்பில் புதிய முன்னெடுப்பை எடுத்திருக்கிறது புளூ ஸ்டார்.
ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வீ, கீர்த்தி பாண்டியன், பக்ஸ் நடித்த புளூ ஸ்டார் இந்த வார வரவில் மிக வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கிறது.
வழக்கமாக ரஞ்சித் கம்பெனி படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலி வேதனை நியாயங்களை சொல்லி வந்தார்கள்.
முதல் முறையாக ஊருக்கு நன்மை என்றால் சாதி வட்டத்தில் சிக்காமல் ஒன்றாக இணைந்து போராடினால் வெற்றி பெறலாம் என்ற ஒற்றை வரி சித்தாத்தத்தை கையில் பிடித்து படமாக்கி இருக்கிறார்கள்.
போற போக்கில் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் சாதி வெறியையும் பட்டவர்த்தனமாக தோலுரித்து தொங்கவிட்டிருக்கிறார் "புல்லட் பாபு" கதாபாத்திரம் மூலம்.
அப்படி என்ன கதைன்னு யோசிக்கிறீங்களா... "வழக்கம் போல ஒரு கிராமம் காலனி பகுதி ஊர் பகுதி இதில் உள்ள பசங்க 2 குழுவா கிரிக்கெட் ...









