‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘சித்தார்த் 40’
சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் '8 தோட்டாக்கள்' ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!
சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சித்தார்த் 40’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. நடிகர் சித்தார்த் தனது படங்களுக்கு புதிய இசையமைப்பாளர்களுடன் கைக்கோர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.
இந்த முயற்சி அவரது முந்தைய படங்களுக்கும் சிறந்த இசையையும் பாடல்களையும் கொடுத்தது.
இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அம்ரித் ராம்நாத் ஒப்பந்தமானது நிச்சயம் நல்ல பாடல்களை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்ற நம்பிக்கைய...









