ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரஸ்யம் “ஜோஷ்வா இமை போல் காக்க” படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்
*“ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படமாக இருக்கும்” - தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்!*
உள்ளடக்கம் சார்ந்த கதைகளை ஊக்குவித்து அதை செயல்படுத்துவது என்ற தெளிவான பார்வை கொண்ட தயாரிப்பாளர் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ், பெரிய திரைகளில் நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம் இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், ராஹே மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஐசரி கே கணேஷ் தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் நாளை (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
...









