தனுசுடன் மோதலா? சிவகார்த்திகேயன் விளக்கம்
தனுசுடன் மோதலா? சிவகார்த்திகேயன் விளக்கம்
எனது படங்கள் தாமதமாவதாகவும் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ஏற்பட்டுவிட்டன.
அடுத்த வருடத்தில் இருந்து ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். எந்த நடிகருக்கும் நான் போட்டி இல்லை. வியாபார ரீதியாக எனது முந்தைய படங்களைத்தான் போட்டியாக பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருக்கான இடம் சினிமாவில் இருக்கிறது. அதை யாரும் பறிக்க முடியாது.
தனுசுக்கும் எனக்கும் எந்த மோதலும் இல்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. மக்களுக்கு என்ன செய்வார்கள் என்ற கொள்கையுடன் அவர்கள் வரவேண்டும். அப்படிப்பட்டவர்களை மக்...









