நடிகை தீபிகா படுகோனே தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பா.ஜ. பிரமுகர் பதவி ராஜினாமா
ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 1–ந்தேதி திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வராமல் தள்ளிவைத்து விட்டனர்.
பத்மாவதி படம் வெளியானால் திரையிடப்படும் தியேட்டர் தீ வைத்து கொளுத்தப்படும் என அரியானா மாநில பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் சுராஜ் பால் அமு கூறி இருந்தார்.
தீபிகா படுகோனே, படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் தலைகளுக்கு ரூ.10 கோடி பரிசும் அறிவித்தார் சுராஜ் பால் அமு. பா.ஜ.க. ஊடகத் தலைவரின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து குர்கானில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சுராஜ் பால் அமு தனது பாரதீய ஜனதா செய்தி தொட...









