‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ முழுக்க காமெடி கதையாம்!
'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' முழுக்க காமெடி கதையாம்!
தமிழ் திரையுலகில் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நாயகனான நடிகர் வைபவ் கதையை வழி நடத்திச் செல்லும் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படம் - வங்கி கொள்ளையை நகைச்சுவையுடன் விவரிக்கும் படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் - அருண் கேசவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி ஆகியோருடன் தமிழ் சினிமாவில் கலை சேவை செய்து வரும் முன்னணி நகைச்சுவை நட்சத்திர கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். காமெடியாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை பி. டி. ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வ...









