நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ – கோடங்கி விமர்சனம்
நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ & கோடங்கி விமர்சனம்
கலகலப்பான அரசியல் நையாண்டி படம் பாக்கலாம்னு இப்ப யாரும் யோசிக்கிறதே இல்ல... ஏன்னா நிஜமாவே தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாமே தெனந்தெனம் பண்ற கூட்டணி கூத்துக்களை பாக்கும்போது இதைவிடவா ஒரு நையாண்டி படம் வேணும்னு தோணும்...
ரேடியோ ஜாக்கி பாலாஜி ஹீரோ வேஷம்போட்டு நடப்பு அரசியலை வரப்போற அரசியலை கட்சி பேதம் இல்லாம செக்குல போட்டு மாடு போட்டு ஆட்டி பிழிஞ்சி ஆயில் எடுக்க முயற்சி பண்ணியிருக்கார்...
பல நிஜக்கட்சிகளுக்கு ஆயில் தடவி ஆப்பும் ஏத்தியிருக்கார்... யார் யாருக்கு ஆயில் தடவின ஆப்பு... யாருக்கெல்லாம் டிரை ஆப்புன்னு படம் பாத்தா புரியும்...
எங்க ஊர் உங்க ஊர் கலாய்ப்பு இல்ல உலக மகா கலாய்ப்பு ஆர்.ஜே.பாலாஜியின் கலாய்ப்பு... ஆனா ஒரே ஒரு குறை... ஓவர் வாய்ஸ்... நடிப்பு பெருசா வரல... இந்த கு...








