வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

திரைப்படங்கள்

நினைவெல்லாம் நீயேடா படத்துக்காக இளையராஜா எழுதி இசையமைத்த பாடலை பாடிக் கொடுத்த யுவன்ஷங்கர்ராஜா!

நினைவெல்லாம் நீயேடா படத்துக்காக இளையராஜா எழுதி இசையமைத்த பாடலை பாடிக் கொடுத்த யுவன்ஷங்கர்ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  நினைவெல்லாம் நீயேடா படத்துக்காக இளையராஜா எழுதி இசையமைத்த பாடலை பாடிக் கொடுத்த யுவன்ஷங்கர்ராஜா!   இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் "நினைவெல்லாம் நீயடா" படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர் வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. காலக் கரையான்களால் செல்லரிக்க முடியாத பள்ளிப் பருவக் காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இசைஞானி அசத்தும் ஐந்து பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார். கவிஞர் பழநிபாரதி எழுதிய "மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்..." என்ற பாடலை பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திக் பாடியிருக்கிறார். கவிஞர் சினேகன் எழுதிய மூன்று பாடல்களில், "வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை" என்ற ...
பவுன்சராக களமிறங்கும் தமன்னா!

பவுன்சராக களமிறங்கும் தமன்னா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படமும், 5 தெலுங்கு படங்களும், ஒரு இந்தி படமும் கைவசம் உள்ளன. தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. பாரிஸ் பாரிஸ் படமும் முடிந்துள்ளது. இந்த நிலையில் ‘பப்ளி பவுன்சர்' என்ற இந்தி படத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தயாராகிறது. இதில் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ், சாஹில் வைத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். மது பண்ட்ராக்கர் டைரக்டு செய்கிறார். இந்த படம் தெலுங்கு, தமிழிலும் வெளியாக உள்ளது. தனது படம் 3 மொழிகளில் தயாராவதால் தமன்னா மகிழ்ச்சியில் இருக்கிறார்....
குஷியாக கேக் ஊட்டிய ரெய்சா I கண்ணீர் விட்ட விஷ்ணுவிஷால் I FIR success celebration

குஷியாக கேக் ஊட்டிய ரெய்சா I கண்ணீர் விட்ட விஷ்ணுவிஷால் I FIR success celebration

CINI NEWS, HOME SLIDER, kodanki darbar, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    குஷியாக கேக் ஊட்டிய ரெய்சா I கண்ணீர் விட்ட விஷ்ணுவிஷால் I FIR success celebration   https://youtu.be/OEpyBdLdLzw
தப்பித்த ”கள்ளன்” விரைவில் தியேட்டரில் பார்க்கலாம்!

தப்பித்த ”கள்ளன்” விரைவில் தியேட்டரில் பார்க்கலாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கள்ளன்' டைட்டில் விவகாரம்… தள்ளுபடி செய்தது நீதிமன்றம்! பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கள்ளன்'. இதில் இயக்குனர் கரு.பழனியப்பன், நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.இந்த நிலையில் குறிப்பிட்ட ஜாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு ஊர்களிலிருந்து வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஒரு பெண் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.அதில், ' கள்ளன்' படத்திற்கு சென்ஸார் கொடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கி...
அரபிக் குத்து பாடலுக்கு ஏர்போர்ட்டில் சமந்தா நடனம்

அரபிக் குத்து பாடலுக்கு ஏர்போர்ட்டில் சமந்தா நடனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகர் விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு நடிகை சமந்தா ஆடியிருக்கும் டான்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங...
எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியானது!

எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் இன்று(18.02.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் சரியாக 6 மணிக்கு வெளியானது. இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
ஆலியாபட் படத்திற்கு எதிர்ப்பு!

ஆலியாபட் படத்திற்கு எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'கங்குபாய் கத்யாவாடி' படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 1960களில் மும்பையிலுள்ள காமாட்டி புரத்தில் வாழ்ந்த பெண் தாதா கங்குமாய் பற்றிய கதை. காதலனால் கைவிடப்பட்ட பெண், ஒரு தாதாவின் தன் தங்கையாக பாலியல் தொழில் செய்யும் பகுதியில் வாழ்கிறார். பின்னாளில் அவரே அண்ணன் தாதாவின் இடத்திற்குக் கொண்டுவரப்படுகிறார், இதுவே கதை. ஆனால் படத்தில் கங்குமாய் விபச்சாரம் செய்வது போலக் காட்டியிருப்பதாகக் கூறி கங்குமாயின் வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது இந்தப் பட...
விலங்கு ரசிகர்களை ஏமாற்றாது இனி புது விமலை பார்க்கலாம்

விலங்கு ரசிகர்களை ஏமாற்றாது இனி புது விமலை பார்க்கலாம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விலங்கு ரசிகர்களை ஏமாற்றாது இனி புது விமலை பார்க்கலாம்   https://youtu.be/jdsYvgZENIs
ராம் சரண் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஷங்கர் படக்குழு!

ராம் சரண் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஷங்கர் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலுகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராம் சரண். இவர் நடிப்பில் வெளியான மகதீரா, யவடு, துருவா, ரங்கஸ்தலம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. அதில், "ராம்சரண் 15' படத்தின் படப்பிடிப்பு திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்...
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2003-இல் வெளியான ஸ்டுடண்ட் நம்பர் 1 படத்திம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நடிகர் சிபி சத்யராஜ். அதன்பின் அவருடைய தந்தை சத்யராஜுடன் சேர்ந்து மன்னின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை, ஜேக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா போன்ற பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கபடதாரி படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இவர் நடிப்பில் மாயோன், ரங்கா, வட்டம், ரேஞ்சர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.   அதன்பின் அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கும், புதிய படத்தில் சிபி நடிக்க உள்ளார். இவரின் 20-வது  படமாக இது உருவாகிவருகிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் இச...