வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

திரைப்படங்கள்

குலுமணாலியில் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஷூட்டிங் கேன்சல் ஆன கார்த்தியின் தேவ் படம்!

குலுமணாலியில் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஷூட்டிங் கேன்சல் ஆன கார்த்தியின் தேவ் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  குலு மணாலியில் ஏற்பட்ட கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நின்றது கார்த்தியின் “ தேவ் “ பட படப்பிடிப்பு ! கார்த்தியின் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதை பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது , தேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார் , பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது....
சென்சார் அதிகாரிகள் பாராட்டிய “பரியேறும் பெருமாள் “

சென்சார் அதிகாரிகள் பாராட்டிய “பரியேறும் பெருமாள் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தை பாராட்டிய தணிக்கை குழுவினர்கள். இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல். கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அதிகாரிகள் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் படத்திற்கு U சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் கதைக்களத்தை வெகுவாக பாராட்டிய அதிகாரிகள் இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் திடமும் , இரண்டு இடங்களில் மட்டும் மியூட் செய்ய சொல்லிய அதிகாரிகள், இந்த படத்தில் எந்த இடத்திலும...
மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்த விக்ரம்

மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்த விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘அர்ஜுன்ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக ‘வர்மா’ உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘இயக்குனர் பாலா தனது படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவரது இயக்கத்தில் எனது மகன் துருவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்’’ என்றார். துருவ் பேசும்போது, ‘‘நான் நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். குறிப்பாக எனது தந்தை விக்ரம் நடிக்கும் படங்களை இரண்டு மூன்று தடவை கூட பார்ப்பது உண்டு. எனது தந்தைக்கு நான் தீவிர ரசிகன். சேது படத்தில் எனது தந்தை நடிப்புக்கு இயக்குனர் பாலா உயிர் கொடுத்து இருந்தார். அதே போல வர்மா படத்திலும் எ...
இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி

இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் சேதுபதி அறிமுக இயக்குநர் ரோகநாத் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்து இயக்குனரிடம் கேட்டபோது, “நான் இந்தக் கதையின் ஒன்லைனை ஜனநாதன் சாரிடம் சொன்னேன். அவர்தான் விஜய் சேதுபதியிடம் சொல்லிப்பார் என்றார். அவரிடமும் ஒன் லைன் சொல்ல அவருக்கும் பிடித்திருந்தது. பிறகு படத்தின் மொத்தக் கதையையும் எழுதி முடித்துவிட்டு அவரிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லிவிட்டார். இசையைப் பற்றியும் சர்வதேச அளவில் நடந்துவரும் ஒரு பிரச்னை குறித்தும் பேச இருக்கிறேன். இதில் இசைக் கலைஞராக விஜய்சேதுபதி நடிச்சிருக்கார். அதற்காக, பியானோ, கிட்டார் என கற்று வருகிறார். வெளிநாட்டு பெண் ஒருவர் அவருடன் நடிக்கிறார். ஹீரோயின் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்“ என்றார்....
முதன்முறையாக பிரபுதேவாவின் தேவி 2 படத்தில் நடிக்கும் நந்திதா

முதன்முறையாக பிரபுதேவாவின் தேவி 2 படத்தில் நடிக்கும் நந்திதா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  `அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா. தொடர்ந்து `எதிர்நீச்சல்', `முண்டாசுபட்டி' படங்களில் நடித்தவர் சமீபத்தில் வெளியான `அசுரவதம்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து இருந்தார். முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நந்திதா, முதன்முறையாக பிரபுதேவா நடிக்கும் தேவி 2 படத்தில் நடிக்க உள்ளார். நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் நந்திதா மகிழ்ச்சியாக இருக்கிறார். தேவி படத்தின் முதல் பாகத்தில் பிரபுதேவா ஜோடியாக தமன்னா இந்த படத்திலும் தொடர்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நித்யா மேனன் மற்றும் ஏமி ஜாக்சனுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் `தேவி 2' படத்தின் படப்பிடிப்பு மொரீசியசில் தொடங்கியதாக பிரபுதேவா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பிரபுதேவாவுடன் மூத்த நடிகை கோவை ...
காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’

காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
  நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ஸ்ரீதர், படத்தொகுப்பு - ஆர்.கே.செல்வா, தயாரிப்பு - பா.ரஞ்சித், எழுத்து, இயக்கம் - மாரி செல்வராஜ். ராமிடம் இணை இயக்குனராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதை தொகுப்பு, ‘மறக்க நினைக்கிறேன்’ தொடர் ஆகியவற்றை எழுதியவர். படம் பற்றி கூறிய இயக்குனர்... “இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்க...
ஜெ.,வின் வாழ்க்கை வரலாற்றைப் படம் ‘தி அயர்ன் லேடி’

ஜெ.,வின் வாழ்க்கை வரலாற்றைப் படம் ‘தி அயர்ன் லேடி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார். இப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூர்யாவுடன் கைகோர்த்த உறியடி இயக்குநர்

சூர்யாவுடன் கைகோர்த்த உறியடி இயக்குநர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  `உறியடி' படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. அதையும் விஜய குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார். இது தயாரிக்கும் 7-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார். விஜய குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் `மெட்ராஸ் சென்ட்ரல்' பிரபலம் சுதாகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். `உறியடி' முதல் பாகத்தில் நடித்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். விஜய்சேதுபதியின் `96' படத்தில் தனது இசையின் மூலம் அனைவரையும...
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து திருட்டி விசிடி, கககபோ, படங்களில் நடித்த இவர் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகையான இவர், தற்போது அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மேன்மை கொண்ட, உத்வேகம் தரக்கூடிய சிறந்த மனிதர். அவரை சந்தித்தது ஆசிர்வாதமாக என் வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருப்பேன். பெரிய ரசிகையாக உணர்ந்த தருணம் இது’ என்று அஜித்...
தூக்கு துரை ஆன அஜீத்… இரட்டை வேஷம்…  விஸ்வாசம் சீக்ரெட்..!

தூக்கு துரை ஆன அஜீத்… இரட்டை வேஷம்… விஸ்வாசம் சீக்ரெட்..!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ திரைப்படங்களை தொடர்ந்து 4வது முறையாக சிவா-அஜித் கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வில்லன் ரவி ஆவனா மற்றும் தல அஜித் இடையேயான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. இதன் புகைப்படங்கள் சமீபத்தில் லீக்காகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தில் அஜித் அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. இந்நிலையில், அஜித் நடிக்கும் ஒரு கதாபாத்திரன் பெயர் ‘தூக்கு துரை’ என கூறப்படுகிறது. ஆனால், இது அப்பா அஜித்தின் பெயரா அல்லது மகன் அஜித்தின் பெயரா என்பது தெரியவில்லை....