இளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்
இளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்
‘அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து - வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் - கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் - எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ், ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி,சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன்...









