மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இலவச திட்டங்கள் இருக்காது- கமல்
மதுரை பொதுக்கூட்டத்தில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன், பொதுமக்களின் கேள்விகளுக்கு மேடையிலேயே பதில் அளித்தார். அது வருமாறு:-
கேள்வி: அரசியலில் எத்தனை நாட்கள் நீங்கள் தாக்குப் பிடிப்பீர்கள்?
பதில்: என் மூச்சு உள்ள வரை தாக்குப்பிடிப்பேன்.
கேள்வி: உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்ததால்தான் விஸ்வரூபம் எடுத்தீர்களா?
பதில்: மக்களின் நிலையைக் கண்டு இனிமேல்தான் விஸ்வரூபம் எடுக்கவேண்டும். இவர்களுடன் சேர்ந்து(மக்கள்) விஸ்வரூபம் எடுப்பேன்.
கேள்வி: அரசியலில் உங்கள் வழிகாட்டி யார்? காந்தியா, பெரியாரா, அம்பேத்கரா, காமராஜரா?
பதில்: அனைத்து கடவுள்களையும் பிடிக்கும் என்று நாம் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல் எனக்கும் அனைத்து தலைவர்களையும் பிடிக்கும்.
கேள்வி: ஊழலை ஒழிப்போம் என்கிறீர்கள்? எப்படி ஒழிப்பீர்கள்?
பதில்: நான் எப்படி ஒழிப்பேன்? இது நல்ல கதையாக இருக்கிறதே? எல்லாரும் ...









