சனிக்கிழமை, செப்டம்பர் 26
Shadow

நடிகர்கள்

ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது ‘மஹாவீர் கர்ணா’

ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது ‘மஹாவீர் கர்ணா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஒரு மாவீரன். இதிகாச நாயகன். பெருங்காப்பியத் தலைவன் திரையில் உயிர்பெறுகிறான். மஹாவீர் கர்ணன் ஆக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது ‘மஹாவீர் கர்ணா’(MahaveerKarna) பென் மூவீஸ் (PEN MOVIES ) ஜெயந்திலால் கடா வழங்க (JAYANTILAL GADA PRESENTS), ஆர்வி ஸ்டூடியோஸ் - ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ்  (RV STUDIOS & SRI NEELADRI PRODUCTIONS) இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. கர்ணனின் காவியத்தை இந்தியத் திரைகளில் உயிர்ப்பெறச் செய்ய வருகிறது ‘மஹாவீர் கர்ணா’. மகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ரமேஷ் வர்மா (RAMESH VARMA) பிரம்மாண்ட திரை அனுபவத்தை காட்சிப்படுத்த இருக்கிறார். ரூ.150 கோடி பொருட் செலவில் தயாராகவுள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தி...
‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'அன்பில் அவன்'. ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய,  மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ்  சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார். இவ்விழாவில் ஹேப்பி ஹை பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது, "இந்தப் படம் எடுக்க முடிவு செ...
ராஷ்மிகா மந்தானாவின் மிரட்டலான புதிய அவதாரம்: ‘மைசா’ திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு!

ராஷ்மிகா மந்தானாவின் மிரட்டலான புதிய அவதாரம்: ‘மைசா’ திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
    ராஷ்மிகா மந்தானாவின் மிரட்டலான புதிய அவதாரம்: 'மைசா' திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு! அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான 'மைசா' (Mysaa) டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். "நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்..." என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் டீசர் தொடங்குகிறது. சமூகத்தின் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, தனி ஒரு போராளியாக நின்று களம் காணும் அஞ்சாத ஒரு பெண்ணாக ராஷ்மிகா இதில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த போரில் அவர் வெறும் போராளி மட்டுமல்ல; போரின் போக்கையே தீர்மானிக்கும் பேராயுதமாக உருவெடுக்கிறார். கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக (Gond t...
நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’ மிகவும் எதிர்பார்க்கப்படும் துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஓக தாரா ‘AOT’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. ‘AOT’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், படக்குழு சிறப்பான புரமோஷன் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் ப...
’என்ன விலை’ திரைப்பட கோடங்கி விமர்சனம் 3/5

’என்ன விலை’ திரைப்பட கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    கருணாஸ் – நிமிஷா சஜயன் நடிப்பில், சஜீவ் பழூர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘என்ன விலை’ ஒரு சாதாரண மனிதன், அதிகார அமைப்பில் சிக்கிக்கொண்டால் அவனுடைய வாழ்க்கை எப்படி தலைகீழாகிறது என்பதை அழுத்தமாக பேச முயற்சித்த படம் என்ன விலை… ஒரு வரிக்கதை... ராமேஸ்வரத்தில் திதிக்காக கடலில் பக்தர்கள் வீசும் சில்லறைகளை சேகரித்து குடும்பத்தை நடத்தும் கருணாஸ். ஒருநாள் அவருடைய கையில் எதிர்பாராத விதமாக விலை உயர்ந்த தங்கம் கிடைக்கிறது. “இது எனக்கு வேண்டாம்… உரியவர்களிடம் ஒப்படைத்துவிடலாம்” என்று அதை போலீஸிடம் கொடுக்கிறார். அதுதான் அவருக்கு வினையாகிறது! நேர்மையாக நடந்துகொண்ட மனிதரே திருட்டு வழக்கில் சிக்குகிறார். அதற்குப் பிறகு போலீஸ் → வழக்கு → நீதிமன்றம் → வழக்கறிஞர் என்று கதை நகர்கிறது…. நிற்கிறது… முடிவை நோக்கி ஓடுகிறது… கருணாஸ் இதுவரை நாம் பார்த்த கருணாஸை ...
‘நல்ல படம்’ — கோடங்கி திரை விமர்சனம் 3/5

‘நல்ல படம்’ — கோடங்கி திரை விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    “படத்துக்கு பெயரே ‘நல்ல படம்’… உண்மையிலேயே நல்ல படமா? இல்ல… குடிகாரர்களை வைத்து நல்ல மெசேஜ் சொல்ல வந்த படமா?” இயக்குநர் சி. பிரபுராம், தயாரிப்பாளர் ஏ. அழகுபாண்டியன், நாயகன் ஹரிஷ் அழகுபாண்டியன், தனலட்சுமி, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம், மது பழக்கத்தை மையமாக வைத்து காமெடி + சமூக கருத்து + காதல் + ஆக்‌ஷன் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது. படம் 110 நிமிடங்கள் ஓடுகிறது.  கதை என்ன? ஹரிஷ் என்ற இளைஞனுக்கு மது இல்லாமல் வாழ்க்கையே இல்லை. காலையிலிருந்து இரவு வரை நண்பர்களுடன் குடித்துக்கொண்டே இருப்பவர். அதோடு நிற்காமல், குடிப்பவர்களின் உரிமைக்காக “மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்” என்ற அமைப்பையும் நடத்துகிறார். அப்போதுதான் கதையில் மிகப்பெரிய திருப்பம்: நாடு முழுவதும் மதுவுக்கு தடை! அவ்வளவுதான்… கையில் இருந்த பாட்டில் ப...
‘தி டார்க் ஹெவன்’ — கோடங்கி  திரை விமர்சனம் 3/5

‘தி டார்க் ஹெவன்’ — கோடங்கி  திரை விமர்சனம் 3/5

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    “பேய் கொல்கிறதா… சைக்கோ கொலையாளியா… இல்ல இந்த இரண்டு பேரையும் தாண்டி வேற யாராவது இருக்கிறார்களா?” — இந்த கேள்வியை வைத்து இரண்டரை மணி நேரத்துக்கு மேல் பார்வையாளரை உட்கார வைக்கிறது ‘தி டார்க் ஹெவன்’. பாலாஜி இயக்கத்தில் சித்து சித், தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் mystery crime thriller. கதை என்ன? தமிழ்நாடு–கேரள எல்லையில் இருக்கும் மெக்கரை என்ற மலைக்கிராமம். அங்கே ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஜூன் மாதத்தில் ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதற்கு காரணம் வனதேவதையின் சாபம் என்று ஊர் மக்கள் நம்புகிறார்கள். அதே நேரத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் எழுதிய ‘The Dark Heaven’ என்ற மர்ம புத்தகம் ஒருவரின் கையில் கிடைக்கிறது. அதில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்கள், ஏன் ஒருவர் இறக்கப்போகி...
‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'கன்னடத்து பைங்கிளி' படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமான'கன்னடத்து பைங்கிளி'-யை  சாய் ரமணி இயக்க எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க ஆர். கோபி வழங்குகிறார் எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிப்பில் ஆர். கோபி வழங்கும் 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்தை 'சிங்கம் புலி', 'மொட்ட சிவா கெட்ட சிவா'  படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார். பன்முக வித்தகரான டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாக இது அமைந்துள்ளது. டி.ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பண...
விஜய் சேதுபதியின் ‘பத்தா’  படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு

விஜய் சேதுபதியின் ‘பத்தா’  படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ‘பத்தா’  படத்தின் 'வேர்ல்ட் ஆஃப் பத்தா' டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் 'வேர்ல்ட் ஆஃப் பத்தா' டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் பயணிக்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் தேடலின் பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது. கதை குறித்த முக்கிய தகவல்கள் எதையும் வெ...
டாக்டர் ஐசரி கே கணேஷ் – சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி படத்தின் டீசர் வெளியீடு!

டாக்டர் ஐசரி கே கணேஷ் – சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி படத்தின் டீசர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்  டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி ( Mookuthi Amman 2: Mahasakthi' ) படத்தின் டீசர் வெளியீடு தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் 'ரைஸ் ஆஃப் மஹாசக்தி' டீசர் வெளியீடு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ் ஆப்  மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ...