 
            ரஜினிகாந்த் பிறந்தநாள்: பிரபலங்கள் பலரும் வாழ்த்து..!
            ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (டிசம்பர் 12, 1950), மராட்டிய மாநிலத்தில் பிறந்தார்.  கண்டக்டராக தனது பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.
அவர் தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் நடித்துள்ள ரஜினி, இதுவரை 160 படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக `எந்திரன்' படத்தின் இரண்டாவது பாகமான `2.0' படமும், பா.ரஞ்சித் இயக்கத்தில் `காலா' படமும் உருவாகி வருகிறது. இதில் `காலா' படத்தின் இரண்டாவது கவரிகையை தனுஷ் இன்று வெளியிட்டார்
ரஜினி பிறந்தநாளுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும், மு.க.ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் உள்ளிட்ட ...        
        
    
 
                            

