ஹைக்கூ — கோடங்கி திரை விமர்சனம் 3/5
ஹைக்கூ — கோடங்கி திரை விமர்சனம்
காதலுக்கு ஹைக்கூன்னு பெயர் வச்சிருக்காங்க… ஆனால் காதலே சில இடங்களில் கவிதை எழுத மறந்துடுது!
காதல், பிரிவு, பொறாமை, பழைய நினைவுகள், புதிய உறவு என்று இளமைக்கே உரிய உணர்வுகளைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி.
ஏகன் கதாநாயகனாக முயற்சி செய்திருக்கிறார். தவறுகள் செய்யும், காதலில் தடுமாறும் இளைஞனாக வருகிறார். ஆனால் சில உணர்ச்சிகரமான காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான நடிப்பு இருந்திருந்தால் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பார்.
ஸ்ரீதேவி அப்பல்லாவும் ஃபெமினா ஜார்ஜும் படத்தின் முக்கியமான பலம். குறிப்பாக, காதல் என்ற பெயரில் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற கருத்து கவனிக்க வைக்கிறது.
சித்து குமாரின் இசையும் பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவும் காதலுக்கு அழகான பின்னணியை அமைக்கின்றன. ஆனால் பெண்கள்...









