என் கேரியரில் யூடர்ன் படம் மிக முக்கியமானது – பூமிகா பெருமிதம்
இருபது ஆண்டுகள் கடந்தாலும்,தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும் போது அவற்றை தவற விட்டதும் இல்லை. எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதை விட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர். அதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம் தான் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'யு-டர்ன்'. இந்த படம் வெறும் நட்சத்திர பட்டாளத்தை தாண்டி, மிகச்சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, "ஒரு திரைக்கலைஞர் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை செய்யும்போது அங்கீகாரம் பெறுவார், அவரும் அதனால் திருப்தி அடைவார...









