ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ – நடிகர் ஆகாஷ் முரளி!
*“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” - நடிகர் ஆகாஷ் முரளி!*
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான 'நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் முரளி ஆர்வமாக இருக்கிறார்.
படம் வெளியாவது பற்றி தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை வெளியான படத்தின் விஷூவல் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்திற்கும் அதே போன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என எதிர்பார்க்கிறேன்” எ...









