பானுப்பிரியா வீட்டு வேலைக்கார சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்… சிறுமியும், தாயும் திருட்டு வழக்கில் கைது
குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோவின் கீழ் நடிகை பானுப்ரியாவும் அவரது சகோதரர் கோபியும் ஆந்திர போலீசாரால் எந்த நேரமும் கைது செய்யப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக சிறுமியும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர்.
நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை பார்த்த சந்தியா என்ற சிறுமியை அவரும் அவரது சகோதரரும் உடல் ரீதியாக தொந்தரவுகள் செய்வதோடு, சம்பளம் தராமல் இழுத்தடித்து வருவதாகவும் சந்தியாவின் தாயார் பத்மாவதி புகார் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து சந்தியாவின் மீது திருட்டுக் குற்றம் சாட்டிய பானுப்ரியா, சந்தியாவுக்கு வயது 14 தான் என்பது தனக்குத் தெரியாது என்று மழுப்பினார்.
இதற்கிடையே, சென்னையில் உள்ள பானுப்ரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமி சந்தியாவை மீட்ட, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்ப்ப...









