“சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !
சூர்யாவின் 2D Entertainment வழங்கும் “சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !
நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் அடையாளம் மூலம் அறிமுகமாகும் போது அதன் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு சரியான முறையில் மார்கெட்டிங் செய்யப்பட்டு, பெருமளவு மக்களை சென்றடைந்து,வெற்றி பெறும் போது தான் அவனது படைப்புலகம் பூரணத்துவம் பெறுகிறது.
கடந்த சில வருடங்களில் மிக நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் மிக பெரிய நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியாகி பெரு வெற்றியை அடைந்து வந்துள்ளது.
ஒரு சிறு டீஸர் மூலமாகவே இணைய உலகின் கவனம் ஈர்த்த படம் “சில்லுக்கருப்பட்டி”. இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ( 2D Entertainment ) வாங்கியிருப்பது இப்படத்தின்மீது பன்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலு...









