சர்ச்சையை ஏற்படுத்துமா திரெளபதி!
மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜுபின் இசையமைக்க மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறுகையில், இந்தப் படம் திரைக்கு வருவதே ஒரு வெற்றி. கூட்டு முயற்சியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் ஒரு எள்ளளவு கூட குறையாமல் வந்து சேரும். இந்த விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்பட்டே தீரும்.
இது அனைத்து தரப்பு மக்களுக்குமான படம். சில உண்மை சம்பவங்கள் மக்களுக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்கிற மோகன் படத்தின் விளம்பரத்திலேயே "சாதிகள் உள்ளதடி பாப்பா" என பாடலை மாற்றி சர்ச்சையை கிளப்...









