மொட்டை ராஜேந்திரனின் “ராபின்ஹூட்”
இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின்ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.
லூமியெர்ஸ் ( lumieres ) ஸ்டுடியோஸ். பி.( லிட்) என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் " ராபின்ஹூட் "
இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின்ஹூட் கதாப்பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் கூறியதாவது..
"நாற்பது வருடங்களுக்கு முன்பு மச்சம்பட்டி என்ற கிராமத்தில் மக்கள் மழை இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். நமக்கு மழை பெய்து எப்ப...









