சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

நடிகைகள்

சம்பள பாக்கி  புகார் கவுதமி மீது கமல் நிறுவனம் சந்தேகம்..!

சம்பள பாக்கி புகார் கவுதமி மீது கமல் நிறுவனம் சந்தேகம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர். பின்னர் திடீரென கமல்ஹாசனுடன் உறவை முறித்து கொண்டு தனது மகளுடன் தற்போது அவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம் மற்றும் ‘தசாவதாரம்’ ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், இதற்காக அவருக்கான சம்பளத்தை ராஜ்கமல் நிறுவனம் தரவில்லை என்றும் திடீரென குற்றசாட்டை எழுப்பினார்.கமல் கட்சி ஆரம்பித்து இரண்டே நாளில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் மீது சமூக வலைத்தள பயனாளிகள் கடும் விமர்சனத்தை வைத்தனர். தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளத்தை ஒழுங்காக கொடுக்காத கமல், எப்படி நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற போகிறார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பினர்இந்த நிலையில் கவுதமியின் குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் பதிலளித்துள்ளது. தசாவதாரம்’ படத் தயா...
குளியல் தொட்டியில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்தது – தடயவியல் அறிக்கை வெளியானது

குளியல் தொட்டியில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்தது – தடயவியல் அறிக்கை வெளியானது

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார். ஸ்ரீதேவியின் பிரேதப்பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் அறிக்கை கிடைக்காததால் அவரது உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று பிற்பகல், அவரது தடவியல் அறிக்கை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீதேவியின் ரத்தத்தில் மது அருந்தியதற்கான தடயங்கள் கா...
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு புரி கடற்கரையில் மணல் சிற்பம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு புரி கடற்கரையில் மணல் சிற்பம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை புரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார். தேசிய அளவில் தலைசிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழும் இவர், சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் இன்று மணல் சிற்பம் அமைத்துள்ளார். சுதர்சன் பட்நாயக்கும், அவரது மாணவர்களும் புரி கடற்கரையில் ஸ்ரீதேவியின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். இந்த சிற்பத்துக்கு அப்பகுதி மகக்ள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது க...
சம்பள பாக்கி – கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி குற்றச்சாட்டு

சம்பள பாக்கி – கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்து வாழ்ந்த நிலையில், நடிகை கவுதமி கமலுடன் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு அவர்கள் ஒன்று சேரவில்லை. இப்போது கமல்ஹாசன் அரசியலில் இறங்கி தனிக்கட்சி தொடங்கி இருப்பதையடுத்து கமலும், கவுதமியும் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதை நடிகை கவுதமி மறுத்துள்ளார். இது சம்பந்தமாக டுவிட்டர் இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:- நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. 2016-ம் ஆண்டில் பிரிந்து வந்த பிறகு நான் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை. கமலை விட்டு வெளி வந்ததை தொடர்ந்து நான் எனது வாழ்க்கையை கட்டமைக்க தேவையான முயற்சிகளை செய்து வருகிறேன். நானும் எனது மகளும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முயற்சியி...
திரைப்பட நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்

திரைப்பட நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் ஸ்ரீதேவி (54). இவர் 4 வயதிலேயே திரைப்படத் துறையில் நுழைந்தவர். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்தார் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ் திரைப்பட உலகில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். இவர் 2013-ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர். ...
‘கரு’ படத்தில்  நடிக்க மறுத்த சாய் பல்லவி – இயக்குநர் A.L. விஜய்

‘கரு’ படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி – இயக்குநர் A.L. விஜய்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கரு’. ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில் நாக செளர்யா ஹீரோவாக நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.   இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் கரு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விஜய், “கரு என் கேரியரில் மிக முக்கியமான படமாக நினைக்கிறேன். இந்த கதையை 2014 ஆம் ஆண்டு லைகா நிறுவனத்தில் நான் சொன்னேன், அப்போது அவர்கள் இந்த படத்தை நீங்கள் எப்போது எடுத்தாலும், நாங்கள் தான் தயாரிப்போம் என்று கூறினார்கள், அதன்படி இன்று அவர்கள் இந்த படத்தை ரொம்ப சிறப்பாக தயாரித்திருக்கிறார...
வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய அனுஷ்கா படம்..!

வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய அனுஷ்கா படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை. பல பெரிய நடிகர்களின் ஹிட் படங்களில் நடித்தவர். அண்மையில் அவரில் நடிப்பில் பாகமதி வெளியானது. ரஜினியும் அனுஷ்காவை வாழ்த்தினார். தற்போது தமிழில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் படம் வெளியாகியுள்ளது. பக்தி படமான இதில் நாகார்ஜூனா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் தான் தற்போது பிரச்சனைக்கு காரணம். இதில் வைரமுத்து ஆண்டாளின் பெருமையை உணர்ந்தவர், உயர்த்தியவர் என எழுதியிருந்தார்களாம். இதனால் சிலர் படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களாம். தற்போது படத்தயாரிப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். விளம்பரத்திற்காக வழக்கு போடுபவர்கள் படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் வந்து பார்த்துவிட்டு பின்னர் தவறாக இருக்கிறதா என சொல்லுங்கள் என்று கூறியுள்ளாராம்....
ஏன் தமிழ் படங்களில் நடிக்க இவ்வளவு நாள் ஆனது – விளக்கம் கொடுத்த சாய்பல்லவி

ஏன் தமிழ் படங்களில் நடிக்க இவ்வளவு நாள் ஆனது – விளக்கம் கொடுத்த சாய்பல்லவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரேமம் படத்தின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி. மலர் என்ற ஒரு சின்ன டீச்சர் கதாபாத்திரத்தில் மூலம் அனைவரையும் கவந்தவர். இவர் அடிப்படையில் ஒரு தமிழ்நாட்டு பெண், ஆனால் பல தமிழ் படங்களில் நடிக்க தவிர்த்து மற்ற மொழிகளில் நடித்து வந்தார். அதன் பிறகு ஏ. எல் விஜய் சொன்ன கரு படத்தில் மட்டும் நடிக்க சம்மதித்தார். இந்நிலையில் இன்று கரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது, சாய்பல்லவி பேசுகையில் " உண்மையில் தமிழ் நல்ல கதைக்காக காத்திருந்தேன், இயக்குனர் விஜய் சொன்ன கரு கதை எனக்கு மிகவும் பிடித்தது, அதனால் நடித்தேன் என்று ஆங்கிலத்திலே கூறினார்....
நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா

நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் சினிமா படமாக தயாராகிறது. சாவித்திரியின் சிறுவயது வாழ்க்கை, சினிமாவில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டது, பின்னர் சொந்த படம் எடுத்து சொத்துக்களை எல்லாம் இழந்து இறுதி காலத்தில் வறுமையில் வாடி இறந்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெறுகின்றன. சாவித்திரி குடும்பத்தினர், நண்பர்கள், பழம்பெரும் நடிகர்கள் ஆகியோரிடம் பேசி தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்திரி போன்று தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார் சமந்...
சுருதிஹாசனுக்கு டிசம்பரில் காதல் திருமணம்..?

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் காதல் திருமணம்..?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார். வேறு படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் சினிமாவை தவிர்த்து வேறு வாழ்க்கையும் இருக்கிறது. பாடல், இசையில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்துகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்றார். சில மாதங்களுக்கு முன்னால் சுருதிஹாசனுக்கும், லண்டன் நடிகர் மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தன. சுருதிஹாசனின் தாய் சரிகா மும்பையில் வசிக்கிறார். மைக்கேலை அழைத்துச்சென்று சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். அந்த படங்களும் வெளிவந்தன. பின்னர் சென...