தாய்லாந்தில் உடல் எடையை குறைத்து கேரளாவுக்கு திரும்பிய நடிகர் மகள்!
தமிழ் திரைத்துறை மட்டுமின்றி அனைத்து மொழி திரைத்துறைகளிலும் உச்ச நட்சத்திரங்கள் தங்களுடைய வாரிசுகளை அடுத்த தலைமுறை நடிகர்களமாக உருவாக்கி வருகின்றனர். இதில் மலையாள திரைத்துறை மட்டும் விதிவிலக்கல்ல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் ஏற்கவே இயக்குனராக இருந்து நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் மோகன்லாலின் மகள் விஸ்மாயாவோ சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். அவ்வப்போது தந்தையுடன் ஏதாவது சினிமா நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார்.
மோகன்லாலும் அவரது மகன் பிரணவும் உடல் எடை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் மோகன்லால் மகள் விஸ்மாயாவோ உடல் எடை பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளாமல் சற்று எடை அதிகமாக இருந்தார்.
இந்தநிலையில் தற்போது தனது உடல் எடை மீது கவனம் செலுத்த துவங்கிய மோகன்லால் மகள் தன் உடல் எடையை குறைப்பதற்காக...









