ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

நடிகைகள்

”நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி!

”நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இதனிடையில் நடிகர் கவின் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி ஆகியோர் இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுவாரசியமாக உருவான இந்த வெப் தொடரின் ...
விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்! விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருக்கிறார். அதன்படி 'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டீசர் வரும் 11.02.2022 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்....
பிரபாஸ் – பூஜா ஹெக்டே ஜோடியின் ‘ராதே ஷியாம்’ மார்ச் 11ல் ரிலீஸ்!

பிரபாஸ் – பூஜா ஹெக்டே ஜோடியின் ‘ராதே ஷியாம்’ மார்ச் 11ல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' மார்ச் 11 அன்று வெளியாகிறது யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' திரைப்படம் மார்ச் 11 அன்று பல்வேறு மொழிகளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. 'ராதே ஷியாம்' படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. ராதே ஷியாம் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கப...
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்”

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “டைகர்” நடிகர் விக்ரம் பிரபு, உலகளாவிய பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக செயல்பட்டு, தனது ஒவ்வொரு தேர்விலும், அவரது திரைப்படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில் ஒரு கிராமிய பாத்திரத்தில், முழுதாக தன்னை மாற்றிக்கொண்டு, தனது திறமையை நிரூபித்திருந்தார். இந்த முறை இயக்குநர் முத்தையா, இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபுவின் வரவிருக்கும் திரைப்படமான “டைகர்” படத்திற்கு கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார். இப்படத்தினை M Studios நிறுவனம் Open Screen Pictures உடன் இணைந்து தயாரிக்கின்றது. இயக்குனர் கார்த்தி படம் குறித்து கூறுகையில்.., ...
நடிகை சபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று!

நடிகை சபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை சபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். இவருடைய ரசிகர்கள் அவர் மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வருகின்றனர். ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் நடிக்கும் கரண் ஜோஹரின் இயக்கத்தில் தயாராகி வரும் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் சபானா ஆஸ்மி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ...
சுந்தர் சி இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த்!

சுந்தர் சி இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சுந்தர் சி தலைநகரம் 2 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் ஒரு படத்தை இயக்கவும் செய்கிறார். மல்டி ஸ்டாரர் திரைப்படமாக இது உருவாகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்களை வைத்து படம் இயக்குவது சுந்தர் சி-க்கு புதிதல்ல. அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த கலகலப்பு படத்தில் இரண்டு பேரும், கலகலப்பு 2 படத்தில் மூன்று பேரும் நாயகர்களாக நடித்து இருந்தனர். இப்போது மீண்டும் மூன்று பேரை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். நாயகிகளாக மாளவிகா சர்மா, அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை சீரிசை தயாரித்த குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறது. சுந்தர் சி-யின் பிற படங்களைப் போல இதுவும் ரொமான்டிக் காமெடியாக தயாராகிறது...
60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட “மிஸ் அமெரிக்கா” அழகி

60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட “மிஸ் அமெரிக்கா” அழகி

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், நடிகைகள்
  "மிஸ் அமெரிக்கா" பட்டம் வென்ற அழகி 60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்நத 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட் (வயது 30). இவர் மாடலிங் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார். செஸ்லி கிரிஸ்ட், நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் நகரில் 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 9வது மாடியில் வசித்து வந்தார்.   இந்நிலையில், தான் வசித்து வந்த 60 மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து செஸ்லி கிரிஸ்ட் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக கட்டடத்தின் 29வது மாடியில் நின்று கொண்டிருந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதனால், அவர் கட்டடத்தின் 29வது மாடியில் இருந்தே கீழே குதித்து தற்கொலை செய...
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  பிரபல திரைப்பட இயக்குநர் அஸ்வின் சரவணனுக்கும், எழுத்தாளரும் அவரது நீண்ட நாள் காதலியுமான காவ்யா ராம்குமாருக்கும்  பாண்டிச்சேரியில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ’பேனா மற்றும் காகிதத்தில் தொடங்கி, கவிதையில் முடிந்தது... காவ்யா ராம்குமார், ஒவ்வொரு முறையும் என்னுள் எழுந்த புயலை விரட்டியதற்கு நன்றி. உங்களுடன், குறிப்பாக மூன்றாவது அலையின் போது இதைச் செய்வது ஒரு சாகசமாகும்’ எனக் குறிப்பிட்டு தனது திருமண படங்களை பகிர்ந்திருக்கிறார் அஸ்வின்.   https://twitter.com/Ashwin_saravana/status/1487875757796106240?s=20&t=uUcYpym44McN11Ty6qBAsg     அஸ்வின் சரவணன் நயன்தாரா நடித்த 'மாயா' (2015) என்ற திகில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மு...
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்!

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். முன்னதாக இப்படத்தில் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கால்ஷீட் பிரச்சனைகளால் இவர் அதில் இணையவில்லை எனவும் பிரியாவுக்குப் பதிலாக பிக்பாஸ் சீசன் 4-இல் இடம்பெற்ற ஷிவானி நாராயணன் இணையவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் "ஷிவானியின் கதாப்பாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் படத்தில் வடிவேலுடன் நடனமாடுவதையும் காணல...