சனிக்கிழமை, மே 30
Shadow

நடிகைகள்

சபாஷ் நாயுடுவால் இந்தியன்-2 வந்த பிரச்சனை

சபாஷ் நாயுடுவால் இந்தியன்-2 வந்த பிரச்சனை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அரசியலை ஒரு பக்கம் கவனித்துக்கொண்டே இன்னொரு பக்கம் சினிமா, டிவியிலும் கவனம் செலுத்துகிறார் கமல். இந்த மாதம் துவங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். அடுத்து அவர் நடிப்பில் விஸ்வரூபம்-2 வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே வெளியிட திட்டம் இருக்கிறது. காரணம் பிக்பாசில் வைத்து விளம்பரம் செய்தால் அது மக்களிடையே எளிதில் சேரும். பிக்பாஸ் முடிந்த பிறகு இந்தியன் 2 தொடங்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் சபாஷ் நாயுடுவை முடித்துக் கொடுத்தால் தான் அடுத்த படத்தை தொடங்க விடுவோம் என்று தயாரிப்பு தரப்பில் அழுத்தம் தரப்பட்டதாம். எனவே மீதம் இருக்கும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு இந்தியன் 2-ஐ தொடங்கவிருக்கிறார். ஆகஸ்டில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்...
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த ப்ளாஷ்பேக் காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பை முடித்து பின்னணி வேலைகளில் ஈடுபட இருக்கிறார்கள். இதனையடுத்து, டீசர், டிரைலர்கள் வெளியிட இருக்கிறார்கள். பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதால், இப்படத்தின் மீது அதிக...
ஆதிராஜனின் “அருவாசண்ட” படத்தில் பாடகியாக ரம்யா நம்பீசன்..!

ஆதிராஜனின் “அருவாசண்ட” படத்தில் பாடகியாக ரம்யா நம்பீசன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட “ கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகாகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர். “ இந்த படத்தில் மூன்று அட்டகாசமான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை நான் எழுதியிருக்கிறேன். வைரமுத்து எழுதிய “ சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ   “ தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ “ என்ற பாடலை தரண் இசையில் நடிகை  ரம்யா நம்பீசன் அருமையாக பாடியிருக்கிறார் உடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார். இந்த பாடல் காதலர்களின் இதயங்களில் சிம்மாசனம்...
திருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு

திருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமணத்துக்கு தயாராகி விட்டார் அனுஷ்கா என்று தெலுங்கு மீடியாக்களில் செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதை உறுதிபடுத்தும் வகையில் இன்னொரு செய்தியும் வந்து இருக்கிறது. சமீபகாலமாக தான் ஒப்புக்கொள்ளும் படங்களில் நெருக்கமான காட்சிகளோ, கவர்ச்சி காட்சிகளோ இல்லாத மாதிரி பார்த்துக்கொள்கிறார். கதை சொல்ல தொடங்கும்போதே இந்த 2 கட்டுப்பாடுகளையும் இயக்குனர்களிடம் விதித்து விடுகிறார் அனுஷ்கா. காரணம் திருமணம் ஆகவிருப்பது தான் என்கிறார்கள். சமந்தா திருமணத்துக்கு பின் முத்த காட்சிகளில் நடித்தது சர்ச்சையை உண்டாக்கியது. அந்த படம் திருமணத்துக்கு முன்பே ஒப்புக்கொண்டது. எனவே அதேபோன்ற சர்ச்சைக்குள் சிக்க அனுஷ்கா விரும்பவில்லை. எனவே தான் திருமணமாகும் சமயத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள்....
வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் – ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் – ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல் நடிகர் ஜி.வி.பிரகாஷும் அவரது டுவிட்டர் பக்கத்தில் ...
வருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால்

வருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கையில் இருந்த ஒரு படமும் இன்னும் துவங்காததால் வருத்தத்தில் இருக்கிறார் காஜல் அகர்வால். தமிழில் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானவர் காஜல். தொடர்ந்து முன்னணி நடிகையாக அஜித், விஜய், சூர்யா, விஷால், கார்த்தி என்று ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் இப்போது அவருக்கு படங்களே இல்லை. குயின் இந்தி பட ரீமேக்காக உருவாகும் `பாரிஸ் பாரிஸ்' தமிழ் படத்தில் ஒப்பந்தமானார் காஜல் அகர்வால். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதனால் வருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால் ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு முன்னணி ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று கட்டுப்பாடு விதித்திருந்த காஜல் அந்த கட்டுப்பாட்டை உடைத்துவிட்டார். இனி இளம் ஹீரோக்கள் படங்களிலும் நடிக்க இருக்கிறார். அதேபோல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் கேட்டு வருகிறார்....
இனிமேல் எனக்கு கட்-அவுட் வேண்டாம் – எழுமீன் விழாவில்  சிம்பு உருக்கம்

இனிமேல் எனக்கு கட்-அவுட் வேண்டாம் – எழுமீன் விழாவில் சிம்பு உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்தி பே...
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்

வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை பொட்டு படத்தை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது....
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். நடிகைகன் அவ்வப்போது தங்களுடைய நிர்வாண அல்லது அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்து வழக்கம். அந்த வகையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சன்னி லியோன் அவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 18-ஆம் தேதி (நாளை) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகை சன்னி லியோன் அவரது கவர்ச்சி படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
போதை மருந்து கடத்தும் நயன்தாரா

போதை மருந்து கடத்தும் நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார். அனிருத் அளித்திருக்கும் பேட்டியில் இதை சொல்லி இருக்கிறார். மேலும் அனிருத் கூறுகையில், ’ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் செய்து வாழலாம் என்று முடிவு செய்கிறார். என்ன ஆகிறது என்பதுதான் கதை. இதை நெல்சன், பிளாக் ஹியூமர் பாணியில் காமெடியாப் பண்ணியிருக்கார். நயன் எனக்கு நெருக்கமான தோழி. சமயத்தில் விருந்து மாதிரி சாப்பாடு சமைத்து அனுப்புவார். அவருக்கு என் இசை பிடிக்கும். ‘நான் உங்க பெரிய விசிறி என்று சொல்வார். அவங்க வாழ்க்கையில் அவ்வளவு ஏற்ற இறக்கங்கள். ஆனால் இன்னும் முன்னணி கதாநாயகியாகவே இருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய வி‌ஷயம்’ என்று சொல்லியிருக்கும் அனிருத் விரைவில் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போகிறார். ஜனவரி மாதம் படம் துவங...