பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைப்பவர்களுக்கு ஜூன் 23 செருப்படி பதில் கிடைக்கும் – விஷால் பரபரப்பு பேச்சு
கரையான்கள் கஷ்டப்பட்டு ஒன்று ஒன்றாக சேர்ந்து புற்று கட்டி வைக்கும் அதில் வந்து சுலபமாக கரு நாகம் குடிபுகுந்து கொள்ளும் இந்த கதை உங்களுக்கு தெரியும்.
இப்படி ஒரு கதையை உதாரணமாக சொல்லி பாண்டவர் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் விஷால் பேசினார்.
அவர் பேசும் போது;
கடந்த முறை தேர்தல் வந்த போது காலியாக இருந்த நடிகர் சங்க மைதானத்தில் நிலத்தின் மீது கை வைத்து இடத்தை மீட்டு நல்ல கட்டடம் கட்டப்படும் என்று சொல்லிவிட்டு கண்ணீரோடு தேர்தலில் நின்றோம்.
அதே போல உங்கள் ஆதரவோடு வென்றுவிட்டோம்.
இந்த முறை கட்டடத்திற்கு உள்ளே வந்து நின்று மகிழ்ச்சியோடு மீண்டும் தேர்தலில் நிற்கிறோம்.
https://youtu.be/d8C6eaWmBn4
பதவி ஆசைக்குதான் தேர்தலில் நிக்கிறியா என்று கேட்டார்கள். பொடிப்பசங்க வந்து என்ன பன்ன போறீங்கன்னு கேட்டாங்க. மீட்க போறீங்களா, முடியாது, சாதிக்க போறீங்களா , முடியவே முடிய...









