வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

நடிகைகள்

சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்தி!

சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்! தனித்துவமான, உள்ளடக்கம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து, பல அடுக்குகளுடன் கூடிய கதாநாயகன் கதாபாத்திரங்களில் திறமையை வெளிக்கொணர்ந்து வருகிற நடிகர் கவுதம் ராம் கார்த்திக், தற்போது வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப் எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெயரிடப்படாத திரைப்படம்...
கல் என கடவுளை விமர்சிக்கிறதா “கண்ணப்பா” விமர்சனம் 3/5

கல் என கடவுளை விமர்சிக்கிறதா “கண்ணப்பா” விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    கண்ணப்பா விமர்சனம் 3/5 மிக பிரமாண்ட சினிமாவாக வந்திருக்கும் ஒரு புராண கதைதான் கண்ணப்பா. சிவன் கண்ணில் ரத்தம் வழிவதை பார்த்து ஷாக் ஆன ஒரு பக்தன் தன் கண்களை பிடுங்கி சிவனுக்கு பொறுத்தியதாக ஒரு புராண கதை உண்டு. இதுதான் இந்த கண்ணப்பா கதையின் மைய கரு. படம் தொடங்கி முதல்பாதி முடிகிறவரை மையகருவை தேட வேண்டிய நிலை... கதையை தாண்டி திரைக்கதை எங்கோ பயணிக்கிறது. ஆத்தீகர்களுக்கான படமோ என எண்ணும் அளவுக்கு கடவுளை கல் என்றும், பலி கேட்பதெல்லாம் கடவுளா? என வசனங்கள் வருவதெல்லாம் ஷாக் தான்... அதோடு ஹீரோயினோடு ஹீரோ விஷ்ணு மஞ்சுவின் காதல் ரொமான்ஸ் எல்லாம் கண்ணப்பா கடவுள் படமா... கண்ண மூடுப்பா இது காதல் படம்பா என சொல்லும் அளவுக்கு ரொமான்ஸ் தூக்கல் ரகம். கண்டிப்பாக குழந்தைகளுக்கு இந்த ரொமான்ஸ் காட்சிகளில் கண்ணை மூட வைப்பார்கள் பெற்றவர்கள் என்பது மட்டும் நிஜம்... மோக...
லவ் மேரேஜ் விமர்சனம் 3/5

லவ் மேரேஜ் விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  லவ் மேரேஜ் 3/5 லவ் மேரேஜ் படத்தின் பெயரை பார்த்ததுமே ஜாலியான ரொமான்சான ஒரு படமாக இருக்கும் என நீங்கள் யோசித்தால் பாதி சரி மீதி... சரி கதைக்கு வருவோம்... 30 வயசை தாண்டிய விக்ரம் பிரபு பல இடத்தில் பெண் தேடியும் கிடைக்கவில்லை... யாரோ சொல்லி வேறு ஊரில் இருக்கும் சுஷ்மிதாவை பெண் பார்க்க ஒரு மினி வேனில் விக்ரம் பிரபு குடும்பமாக வருகிறார். பெண்ணைப் பார்த்ததும் பிடித்து விடுகிறது... உடனே நிச்சயதார்த்தம் நடத்துகிறார்கள். ஆடுகிறர்கள் பாடுகிறார்கள். எல்லாம் முடிந்து ஊர் திரும்ப வேனில் ஏறினால் வண்டி ரிப்பேர் ஆகிறது. சரி செய்ய முயற்சி செய்யும் போது திடீரென வைரஸ் நோய் பரவி வருவதால் அரசு ஊரடங்கு உத்தரவு போடுகிறது. இதனால் வேறு வழியின்றி பெண் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்ப்படுகிறது. இந்த சூழலில் திடீரென கல்யாண பெண் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்... இதன் பிறகு என்ன நடந்தத...
மார்கன் விமர்சனம் 3/5

மார்கன் விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    மார்கன் விமர்சனம் 3/5   விஜய் ஆண்டனியின் 'மார்கன்' திரைப்படம், சினிமா ரசிகர்களிடையே கலவையான எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. அறிவியலும் ஆன்மீகமும் கலந்த திரைக்கதை. 'நினைவுகளின் வழியே பயணிப்பவன்' என்ற பொருள் கொண்ட சித்தர்கள் மொழியின் 'கனன மார்கன்' என்ற தலைப்பில் உருவாகிய இந்த படத்தை, இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கி இருக்கிறார். மிக வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக தர வேண்டும் என முயற்சித்த இயக்குனர் முதல் பாதி கதையில் காட்டிய வேகத்தை இரண்டாம் பாதியிலும் காட்டியிருந்தால் மார்கன் அதிக மார்க் வாங்கி இருப்பான். கதைதொடங்கும் போதே, சென்னையில் ஒரு இளம் பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டு உடல் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு கிடக்கிறது. அதோடு உடல் முழுதும் கருப்பாக மாறியிருப்பதை பார்த்து போலீஸ் அதிர்ச்சி அடைகிறது. இதே போன்ற ஒரு வழக்கை விசாரித்த போல...
நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த சமயத்தில் அரு...
மீண்டும் இயக்குநராக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா!

மீண்டும் இயக்குநராக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் “கில்லர்” !* *பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!* நீண்ட நாள் காத்திருப்பு ரசிகர்களை ‘குஷி’ படுத்தியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். அவர் இயக்கி நடிக்கும், அவரது கனவுப்படமான “கில்லர்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. நடிகராக இந்தியளவில் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக எப்போது படம் தருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், “கில்லர்” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. அஜித்தின் ‘வாலி’ படம் மூலம் திரையுலகில் இயக்குநராக கால் பதித்த எஸ்.ஜே.சூர்யா, முதல் படத்திலேயே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். இரண்டாவது படமான விஜய் நடித்த ‘குஷி’ பட வெற்றி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. பான் இந்தியா என...
சிவகார்த்திகேயன்  வெளியிட்ட  “சின்னதா ஒரு படம் ” பட   ஃபர்ஸ்ட் லுக்!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட “சின்னதா ஒரு படம் ” பட ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “ சின்னதா ஒரு படம் " படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன். நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பே 'சின்னதா ஒரு படம்'. நான்கும் வேறுபட்ட கதைகளங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டவை. ஜானி டிசோசா.எஸ் இயக்கத்தில் உருவாகும் "சின்னதா ஒரு படம்" ஆந்தாலஜி எனப்படும், நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு திரைப்படமாகும். புதிய கதை சொல்லும் முறைகளுடன் பல்வேறு மனித நிலைமைகளை மையப்படுத்தும் சுவாரஸ்மான கதைகளையும் இத்திரைப்படம் வழங்குகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு முயற்சியாக இத்திரைப்படம் பேசப்படும் என்று நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது. இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு (டாடா படத்தின் இயக்குநர்) எம்ஜி ஸ்டுடியோஸின் கீழ் வெளியிடுகின்றனர். தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு M.D. திருச்சி...
2025 தொடங்கி 2037ம் ஆண்டுக்குள் 7 திரைப்படங்கள் ரிலீசாகும் ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2025 தொடங்கி 2037ம் ஆண்டுக்குள் 7 திரைப்படங்கள் ரிலீசாகும் ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஏழு திரைப்படம் - ஒரு பிரபஞ்சம் - எல்லையற்ற புராணக் கதைகள் - கொண்ட 'மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படைப்பான ' மகாவதார் நரசிம்மா' 2025 ஜூலை 25ஆம் தேதியன்று வெளியாகிறது ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் படைப்பான மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தொடர் 2025 ஆம் ஆண்டு மகாவதார் நரசிம்மாவுடன் தொடங்கி, 2037 ஆம் ஆண்டின் மகாவதார் கல்கி பார்ட் 2 உடன் நிறைவடைகிறது. மகாவிஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்கும் வகையில் இந்த படைப்புகள் தயாராகி இருக்கின்றன. இந்த திரைப்படங்களின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் * மகாவதார் நரசிம்மா (2025 ) * மகாவதார் ப...
‘DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

‘DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    'DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி - நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான 'DNA' திரைப்படம் - விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், '' இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளா...
DNA விமர்சனம் 3.5/5

DNA விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    DNA விமர்சனம் 3.5/5   காதல் தோல்வியில் போதைக்கு அடிமையாகி குடும்பத்தினரால் வெறுக்கப்படுகிறார் ஆனந்த் (அதர்வா). இன்னொருபக்கம் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிசார்டர் என்ற மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருக்கும் திவ்யா (நிமிஷா சஜயன்). போதைப் பழக்கத்திலிருந்து மீளும் ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் திருமணம் ஆகி அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்கிறது. இருவருக்கும் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே மருத்துவமனையில் வேறொரு குழந்தையை கொண்டு வந்து, அதர்வாவின் குழந்தையை யாரோ திருடி செல்கிறார்கள். மற்ற யாருக்கும் அதுகுறித்து தெரியாத நிலையில், அது தன் குழந்தை இல்லை என்று சரியாக கண்டுபிடித்து சொல்கிறார் திவ்யா. அவரை யாரும் நம்பவில்லை. ஆனால் அதர்வாவிற்கு சந்தேகம் ஏற்பட்டு பிரைவேட் மருத்துவமனையில் ஆக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறார். அதில் அவரது குழந்தை இல்லை என்று தெரிய வர, தன...