“இது என்னடா இசைக்கு வந்த சோதனை என்கிற விதமாக விஷாலை பாட வைத்தோம்” ; மதகஜராஜா இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கலாட்டா
கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’.
ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசும்போது,
“இந்த படத்திற்கு எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்து, எந்த ஒரு அழுத்தமோ, நெருக்கடியோ கொடுக்காமல் ஒவ்வொரு பாடலையும் சுந்தர்.சி சார் கூட இருந்தே வாங்கிய விதம் அவ்வளவு அழகாக இருந்தது. இந்த படத்தில் பாடலை உருவாக்கும் போது சுந்தர் சி த...









