மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்!
மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் '2323' படம்!
மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக '2323 The beginning 'உருவாகிறது.
மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத் தமிழ்ப் படம் உருவாகி வருகிறது. கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு 'தமிழனானேன்' என்றொரு படத்தை எடுத்திருந்தார். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.
இந்த' 2323 'படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது,
"இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும்.
...









