நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள படங்களின் பிரமாண்ட வரிசை!
நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள படங்களின் பிரமாண்ட வரிசை!
முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது ரசிகர்கள் அவருடைய திரை வாழ்க்கையின் ஒளிமிகு கட்டத்தை கொண்டாடுகிறார்கள். வரவிருக்கும் ஆண்டு, நிவின் பாலிக்கு மிகச்சிறந்த ஆண்டாக பல்வேறு வகை படங்களால் நிரம்பியுள்ளது. இது ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் பட வரிசையைக் கொண்டுள்ளது.
முதலில், 2025 கிறிஸ்மஸில் வெளியாகவிருக்கும் “சர்வம் மாயா” என்ற ஹாரர்-காமெடி திரைப்படம் மூலம் நிவின் பாலி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜு வர்கீஸுடன் மீண்டும் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிரேமலு படக்குழுவின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” என...









