சம்பள பாக்கி புகார் கவுதமி மீது கமல் நிறுவனம் சந்தேகம்..!
பிரபல நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர். பின்னர் திடீரென கமல்ஹாசனுடன் உறவை முறித்து கொண்டு தனது மகளுடன் தற்போது அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம் மற்றும் ‘தசாவதாரம்’ ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், இதற்காக அவருக்கான சம்பளத்தை ராஜ்கமல் நிறுவனம் தரவில்லை என்றும் திடீரென குற்றசாட்டை எழுப்பினார்.கமல் கட்சி ஆரம்பித்து இரண்டே நாளில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் மீது சமூக வலைத்தள பயனாளிகள் கடும் விமர்சனத்தை வைத்தனர்.
தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளத்தை ஒழுங்காக கொடுக்காத கமல், எப்படி நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற போகிறார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பினர்இந்த நிலையில் கவுதமியின் குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் பதிலளித்துள்ளது. தசாவதாரம்’ படத் தயா...









