பாலியல் தொல்லை புகார்… அவதூறு வழக்கு தொடருவேன் பதறும் அமலாபால்..!
நடிகை அமலா பால், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தார். அதன் பின் அந்த தொழிலதிபரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அமலா பால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
"ஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.
மலேசியாவில் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா ? என்ற பாணியில் பேசினார். நாங்கள் பேச...









