’மஹாராஜா’ திரைப்பட விமர்சனம் 3.5/5
Casting : Vijay Sethupathi, Anurag Kashyap, Natraj, Abirami, Mamta Mohandas, Saingam Puli, Arul Das, Munishkanth, Sachana Nemidas, Boys Manikandan, Kalayan, Kalki
Directed By : Nithilan Swaminathan Music By : B Ajaneesh Loknath Produced By : Sudhan Sundaram, Jagadish Palanisamy
சலூன் கடை நடத்தி வரும் விஜய் சேதுபதி, பள்ளி படிக்கும் தனது மகளுடன் சென்னையின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். அவரது மகள் விளையாட்டு முகாமுக்காக வெளியூர் சென்றிருக்கும் நிலையில், தனது வீட்டில் இருக்கும் லட்சுமி காணவில்லை, என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் விஜய் சேதுபதி, முகமூடி அணிந்த மூன்று பேர் தன்னை தாக்கிவிட்டு லட்சுமியை திருடிச் சென்றுவிட்டதாக சொல்கிறார்.
திருடப்பட்ட லட்சுமி யார்? என்பதை தெரிந்துக் கொண்டு கோபமடையும் ஒட்டுமொத்த காவல் நிலையமும் விஜய் சேதுபதியை கொல்லாத குறையாக விர...









