நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம் ஒரு ஜனநாயக படுகொலை – முன்னாள் நிர்வாகிகள் எதிர்ப்பு
நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:-
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இ...









