சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்
ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் சுற்றுச்சுழலுக்கான நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்சா பதவியேற்றிருக்கிறார்.
கென்யாவின் தலைநகரமான நைரோபியில், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் சுற்றுச்சுழல் மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட தியா மிர்சா “மறுசுழற்சிக்கு எதிரான சானிட்டரி நாப்கின்கள் நம் நாட்டின் சுற்றுச்சுழலைப் பாதிக்கின்றன. அதனால்தான், நான் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். ஒரு நடிகையாக நான் இதைக் கூறுவது கவனத்துக்குரிய விஷயம். ஏனென்றால், பல சானிட்டரி நாப்கின் நிறுவனங்கள் அவர்களின் விளம்பரங்களில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், நான் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், “பெண்கள் சானிட்டரி நாப்கினுக்குப் பதிலாக, சுற்றுச்சுழலைப் பாதிக்காத, மக்கும் தன்மைகொண்ட நாப்கின்களை (biodegradable napkin...









