திங்கட்கிழமை, அக்டோபர் 12
Shadow

செய்திகள்

இலவசங்களால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்- பிரதமர் மோடி !

இலவசங்களால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்- பிரதமர் மோடி !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பானிபட்டில் அமைக்கப்பட்டு உள்ள ரூ.900 கோடி மதிப்பிலான 2ஜி எத்தனால் ஆலையை பிரதமர் மோடி காணொலியில் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் தருவதாக அறிவிக்கலாம். இந்த மாதிரி இலவச திட்டங்களை அறிவிப்பதால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றி விடும். புதிய தொழில் நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தெளிவான நோக்கமும், உறுதிப்பாடும் தேவை. அரசியல் சுயநலத்துக்காக குறுக்கு வழிகளை பின்பற்றுபவர்கள் சில நேரங்களில் கைதட்டல் மற்றும் அரசியல் ஆதாயங்களை பெறலாமே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நமது அரசு குறுக்கு வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும...
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்பு !

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்பு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே போதை பொருள் விற்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு வருகிறது. போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த 5-ந்தேதி எழுதிய கடிதத்தில் போதை பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க உறுதி ஏற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தி போதை பொ...
தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது !

தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது !

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தங்கம் விலை கடந்த மாதம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் ரூ.38,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38,560-க்கு விற்கப்பட்டது. கடந்த 4-ந்தேதி தங்கம் விலை திடீரென்று ரூ.38,920 ஆக அதிகரித்தது. 5-ந்தேதி சற்றே குறைந்து ரூ.38,760-க்கு விற்பனையானது. மறுநாளும் அதேவிலையில் நீடிக்கிறது. நேற்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,800 ஆக உயர்ந்தது. இதையும் படியுங்கள்: கும்மிடிப்பூண்டி அருகே திருட முயன்ற கொள்ளையனை அடித்து கொன்ற கிராம மக்கள் இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் இன்று பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.39,040-க்கு விற்கப்பட...
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்!

HOME SLIDER, NEWS, politics, sports, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையை அடுத்த மாமல்லாபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜுலை 28-ந் தேதி மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் பிரதமருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் வரலாற்றை எடுத்து கூறும் வகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வந்தது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர். 12 நாட்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை நேரு உள்வி...
காமன்வெல்த் போட்டி: சிகரம் தொட்ட இந்திய வீரர்கள்!

காமன்வெல்த் போட்டி: சிகரம் தொட்ட இந்திய வீரர்கள்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தியா சார்பில் 106 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். போட்டியின் நிறைவில் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன. இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ரவி குமார் தயா, வினேஷ் போகத், நவீன் ஆகியோர் தங்கம் வென்றனர். இதேபோல் சர்வதேச அரங்க...
சுதந்திர தின விழா- சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு !

சுதந்திர தின விழா- சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு !

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிஉள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரெயில், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மோப்ப நாய் உதவியுடன் சோதனை, விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து தீவிரப்பட...
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடந்த சில நாட்களாக குலசேகரம், திற்பரப்பு, பெருஞ்சாணி பேச்சிபாறை, போன்ற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணி களின் கூட்டம் அலை மோதுகிறது. இரண்டு நாள் விடுமுறை என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநில மான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து ஆனந்த மாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் சிறுவர் கள் விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் நீச்சல்குளத் தில் அதிக அளவில் குளித்து பொழுதை கழித்தார்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக குளிக்க காற்று நிரப்பிய கார் டியூப்புகளும் வைக்கப் பட்டு உள்ளன. பாதுகாப்பு போலீசாரும் நிறுத்தப்பட்டு உள்ளனர். தற்போது குளிப்பதற்கு ஏற்ற சீசன் தொடங்கப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு ஆசியாவிலே ம...
மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 95 சதவீதம் ஏரி, குளங்கள் நிரம்பின!

மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 95 சதவீதம் ஏரி, குளங்கள் நிரம்பின!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக கல்லணை கால்வாய் பகுதியில் மட்டும் 694 ஏரி, குளங்கள் உள்ளன. இந்த ஏரி, குளங்கள் மேட்டூர் அணை தண்ணீரை கொண்டு நிரம்பக்கூடிய ஏரி, குளங்களாகும். அதன்படி முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும். தற்போது அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் அந்த தண்ணீரைக் கொண்டு ஏரி, குளங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. அதன்படி கல்லணைக் கால்வாயில் உள்ள 694 ஏரி, குளங்களில் 681 ஏரி, குளங்கள் 100 சதவீதம் நிரம்பி விட்டன. மீதமுள்ள 13 ஏரி, குளங்கள் மட்டும் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் அந்தந்த உள்ளாட்சிக்கு சொந்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மழைக்காலங்களில் மட்டும் நிரம்பக்கூடிய குளங்களாகும். அதாவது வடகிழக்கு பருவமழை காலங்களி...
புனித் ராஜ்குமார் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்

புனித் ராஜ்குமார் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  ஆக்டர் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார், போன வருஷம் அக்டோபர் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இளம் வயதிலே அவர் மறைந்தது இந்திய அளவில் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திச்சு. ‘அப்பு’ எனச் செல்லமாக அழைக்கப்படும் புனித், பாடகர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்டிருந்தார். அவர் நினைவாக, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், மைசூர் மிஷன் மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். புனித் ராஜ்குமாரை நினைவுபடுத்தும் விதமாக, ‘அப்பு எக்ஸ்பிரஸ்’ என்று இந்த ஆம்புலன்ஸுக்கு பெயரிடப்பட்டிருக்குது. இதற்காக நடந்த விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ், நூற்றாண்டுக்கும் மேலாக ஏழைகளுக்காகச் சேவை செய்து வரும் மிஷன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்குமாறு நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார். “கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்...
மின் கட்டண உயர்வு பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

மின் கட்டண உயர்வு பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும் அளவு மின் கட்டணம் உயர உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஆன்லைன் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பொது மக்களை நேரில் அழைத்து கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை நகரங்களில் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. கோவையில் வருகிற 16-ந்தேதி எஸ்.என்.ஆர். கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. மதுரையில் தள்ளாக...