வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

இன்று முதல் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு – ஐதராபாத் பறந்த அஜித்

இன்று முதல் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு – ஐதராபாத் பறந்த அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா - அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு பட அதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிந்து மற்ற படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், விஸ்வாசம் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கிறது. இதற்காக நடிகர் அஜித் ஐதராபாத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் துவங்கி, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக...
படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி..!

படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிரபல பாடகி நேஹா பாசின் , இன்ஸ்டகிராமில் தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கோடைகாலம் ஆரம்பித்து விட்டதால் பிரபல நடிகைகள் பலரும் சுற்றுலா சென்று அங்குள்ள கடலிலோ அல்லது நீச்சல் குளத்திலோ குளிக்கும் போது எடுத்த படங்களை ரசிகர்களிடம் ஷேர் செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் தான் பிகினி டிரஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர். தற்போது அஜீத் நடித்த ‘பில்லா’ படத்தில் இடம்பெற்ற ‘செய் ஏதாவது செய்’ என்ற பாடலையும் ‘யோகி’ படத்தில் ‘யோகி யோகி’தான் ஆகிய பாடல்களை பாடியவர் பிரபல பாடகி நேஹா பாசின். தற்போது இவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் இத்தாலி நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
பொய் செய்தியோ மார்பிங் படங்களையோ என் பெயரில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

பொய் செய்தியோ மார்பிங் படங்களையோ என் பெயரில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. "ஒரு நாள் கூத்து" படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவர்களில் ஒருவர்.சமீபமாக ஒரு சில ஊடங்கங்களில் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான படங்களை போட்டு, அது நிவேதா பெத்துராஜ் என்று அறிவித்ததை கண்டு மிகவும் வருத்தமடைந்து உள்ளார். " கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளி இட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேக பட வேண்டி உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இத...
மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து  நாடோடிகள் –  2 படத்தின் படப்பிடிப்பு

மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நாடோடிகள் – 2 படத்தின் படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2 "உருவாகி வருகிறது.               இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின்பிரபாகரன் இசையமைத்த...
வடிவுடையானின் ‘பொட்டு’ மே 25ல் ரிலீஸ்..!

வடிவுடையானின் ‘பொட்டு’ மே 25ல் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா,பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.  வடிவுடையான் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார். மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள பொட்டு இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.   ...
அங்காடிதெரு மகேஷ் –  ஷாலு  நடிக்கும்  “ என் காதலி சீன் போடுறா “

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ்   நாயகனாக  நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன்,மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன்  ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது ... இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை  சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம். படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இட...
‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ படத்தால் இந்திய ராணுவத்திற்கே பெருமை.. ராணுவ அதிகாரிகள் பாராட்டு

‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ படத்தால் இந்திய ராணுவத்திற்கே பெருமை.. ராணுவ அதிகாரிகள் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அல்லு அர்ஜூன், அனு இமானுவேல், அர்ஜூன், சரத் குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற பெயரில் தமிழில் வெளியாகி இருக்கிறது. வி.வம்சி இயக்கத்தில் தேசபக்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜூன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளாலும், வசனங்களாலும் தேசபக்தி ஊட்டியிருக்கும் அல்லு அர்ஜூனுக்கு ராணுவ அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம் இந்திய ராணுவத்தின் பெருமை எனக் கூறி பாராட்டியுள்ளனர். இந்திய ராணுவம் பற்றி நேர்மையாக எடுக்கப்பட்ட படம் என வாழ்த்தியுள்ளனர். இதற்காக, படக்குழுவினர் கலந்துகொண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள் படத்தின் இய...
‘நடிகையர் திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தாய்’ பாடலின்  வீடியோ

‘நடிகையர் திலகம்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தாய்’ பாடலின் வீடியோ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும் நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மதுரவாணி என்ற பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும், விஜய் அந்தோணி என்ற புகைப்படக் கலைஞர் வேடத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர். மேலும், நாக சைதன்யா, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். தமிழில் வருகிற 11 ஆம் தேதி வெளியாகும் ...
காதலருடன் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி

காதலருடன் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ், இஷாவும் இரட்டையர்கள். 3-வது ஆனந்த், இதில் ஆகாஷ் அம்பானிக்கு தனது பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தாவுடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இவர்களது திருமணம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இஷா அம்பானிக்கும் டிசம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கோயிலில் வைத்து ஆனந்த பிரமோல், இஷாவிடம் தனது காதலை வெளிபடுத்தி உள்ளார். இவர்கள் இருவர்ம் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. ஆனந்த் பிரமோல், ரியல் எஸ்டேட் நிறுவனமான Piramal Realty இன் நிறுவனர் ஆவார், Piramal Group இன் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணமும் டிசம்பரில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்க...
தணிக்கை குழு கெடுபிடியில் கமலின் விஸ்வரூபம் 2

தணிக்கை குழு கெடுபிடியில் கமலின் விஸ்வரூபம் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் முடிந்து இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வர தயாராகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இதன் முதல்பாகம் எதிர்ப்புகளில் சிக்கி சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே வெளியானது. தற்போது ‘விஸ்வரூபம்-2’ படமும் தணிக்கை குழுவினரின் கெடுபிடியில் சிக்கி உள்ளது. தமிழில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு யூஏ சான்றிதழ் பெற்றது. இந்தி பதிப்பையும் தணிக்கை குழுவினர் பார்த்து பல காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். 17 சர்ச்சை காட்சிகளை நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு படக்குழுவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தணிக்கை குழுவினர் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தி பதிப்புக்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத...