“கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
“கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் புதிய திரைப்படமான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில், பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மைப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு தீவிரமான திரில்லராக, ஆக்சன் அதிரடிப் படமாக இருக்கும் என்பதைக் குறிக்கின்றது...








