அமாவாசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் சிலர் நுழைந்ததால் ‘பலூன்’ நஷ்டம் – இயக்குனர் சினிஷ்
தொழில் நடைமுறை தெரியாத அமாவாசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் சிலர் நுழைந்ததால் 'பலூன்’ நஷ்டம் - இயக்குனர் சினிஷ்
ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. இப்படத்தை சினிஷ் இயக்கியிருந்தார். யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இயக்குனர் சினிஷ் படம் வெற்றி ஆனல், நான் மகிழ்ச்சியில் இல்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இப்படம் குறித்து டுவிட்டரில் சில கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.
அதில், ‘பலூன்’ வெற்றி... தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி... இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை.
சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் த...









