முதல்வரை அடிப்பேன்… திமிர் பேச்சு… அதிகாலையில் கருணாஸ் கைது..!
முதல்வரை அடிப்பேன்ன்னு அவர் பயப்படுகிறார். ஒரு நாளைக்கே சரக்குக்கு மட்டும் 1 லட்சம் செலவு செய்றேன் என்பது உட்பட பல சர்ச்சை கருத்தை பொது மேடையில் திமிராக பேசிய கருணாஸ் இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம...









